

ஷேல் காஸ், மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் எதுவும் ஓஎன்ஜிசி யிடம் இல்லை என ஓஎன்ஜிசி காவிரிப்படுகை மேலாளரும், செயல் இயக்குநருமான வி.வி.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
காரைக்கால் மாவட்டம் நிரவி பகுதியில் உள்ள ஓஎன்ஜிசி காவி ரிப் படுகை நிர்வாக அலுவலக மைதானத்தில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவலர்கள், பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
மக்களுக்கான நிறுவனமான ஓஎன்ஜிசி, மக்களுக்கு எதிரான திட்டங்கள் எதையும் செயல்படுத் தாது. மீத்தேன் குறித்து தொடர்ந்து சிலரால் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. மக்கள் அதை நம்ப வேண்டாம்.
ஷேல் காஸ், மீத்தேன் எரி வாயு எடுக்கும் திட்டம் எதுவும் ஓஎன்ஜிசியிடம் இல்லை. கடந்த 40 ஆண்டுகளாக மேற்கொள்ளப் பட்டு வருவது போன்றே எண் ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணியை மட்டுமே ஓஎன்ஜிசி செய்து வருகிறது.
மேலும், இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதி யில் எவ்வித சூழல் மாசுபாடோ, குடிநீர் மாசுபாடோ, மக்களுக்கு ஏதேனும் பாதிப்புகளோ ஏற்பட வில்லை. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையிலேயே ஓஎன்ஜிசியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு தற்போது ஒரு நாளைக்கு 1,070 டன் எண்ணெய் உற்பத்தி, 33 லட்சம் கன மீட்டர் இயற்கை எரிவாயு உற்பத்தி என்ற இலக்கை ஓஎன்ஜிசி எட்டியுள்ளது.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சமூகப் பணி களை ஓஎன்ஜிசி நிறுவனம் தொடர்ந்து செய்து வருகிறது. சுமார் ரூ.3 கோடி அளவில் புயல் நிவாரண நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன என்றார்.