Published : 03 Sep 2014 04:30 PM
Last Updated : 03 Sep 2014 04:30 PM

‘பள்ளிகளில் நாளிதழ் அமைப்பு தொடக்கம்

பள்ளிகளில் பத்திரிகை வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் மேலைநாடுகளில் பிரபல நாளிதழ்கள் என்.ஐ.ஈ. எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இதன்படி‘தி இந்து’ நாளிதழ் சார்பில் பள்ளிகள்தோறும் ‘கல்வித் திட்டத்தில் நாளிதழ்’(என்.ஐ.ஈ) என்ற குழு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை அவனியாபுரம்- திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள எஸ்.பி.ஜெ. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் இதன் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குழுவைப் பற்றி இந்து நாளிதழின் மண்டல விற்பனை பிரிவு மேலாளர் ஆர்.பரதன் அறிமுக உரையாற்றினார். சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் மதுரை மண்டல மேலாளர் எஸ்.ஆசைத்தம்பி பேசியது: வாசிப்பும், சேமிப்பும் இரு கண்கள். வாசிப்பால் வாழ்க்கை வசமாகும், சேமிப்பால் வாழ்வு வளமாகும். நூற்றாண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்ற பத்திரிகையான தி இந்து, கடந்த 10 ஆண்டுகளாக பள்ளிகளில் இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்தி வருகிறது. எதிர்காலம் செழிக்கும் வகையில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும், அதை ஊக்கப்படுத்தவும் தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

பள்ளித் தாளாளர் பி.அபர்ணா உள்பட பலர் பேசினார்.’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x