

திமுகவுடன் தோழமையுடன் உள்ளோம் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இ.ஆர்.ஈஸ் வரன் தெரிவித்தார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட பொதுக்குழு மற்றும் கலாச்சார பாதுகாப்பு கூட்டம் மாநில வர்த்தக அணி செயலாளர் ம.சண்முகம் தலைமையில் கரூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியது:
பிப்.3-ல் நாமக்கல்லில் நடை பெற உள்ள 2-ம் உலக கொங்கு தமிழர் மாநாட்டில் 26 நாடுக ளில் இருந்து பலர் கலந்துகொள்ள உள்ளனர். இம்மாநாட்டுப் பணி களில் தீவிரமாக இருப்பதால், அதன்பிறகே தேர்தல் கூட்டணி அறிவிப்பு இருக்கும். திமுகவுடன் தோழமையுடன்தான் உள்ளோம்.
உயர் மின் அழுத்த கோபுரங் களை விளைநிலங்களில் அமைப்ப தால் பாதிக்கப்படும் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுகின் றனர். உயர் மின் அழுத்த கம்பி களை பூமிக்கடியில் அமைத்து மின் விநியோகம் செய்ய நடவடிக்கை களை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.