

சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் பெருங்குடி குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் கொட் டப்பட்டன.
இந்நிலையில் அங்கு குப்பைகளை கிளறி பிளாஸ்டிக், இரும்பு பொருட்களை சேகரிக்கும் சிலர் குப்பைகளிடையே மூட்டை கள் இருந்ததை பார்த்தனர். அவற் றில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட வலது கை மற்றும் 2 கால்கள் தனித் தனியாக இருந்ததை கண்டு அதிர்ச் சியடைந்தனர். தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை போலீஸார் கை, கால்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் ஆல்பின் ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக, போலீஸார் சிலர் கூறியதாவது: பெண்ணின் உடல் பாகம் அழுகாமல் உள்ளது. பெண்ணின் வலது கைரேகையைக் கொண்டு ஆதார் பதிவு மூலம் அவர் யார் என்பதைக் கண்டறிய நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்ணின் கையில் பட்டாம்பூச்சி மற்றும் டிராகன் பச்சை குத்தப் பட்டுள்ளது.
கையில் இருந்த வளையல் ஆகி யவற்றைக் கொண்டும் விசாரணை நடத்தி வருகிறோம். உடலின் மற்ற பாகங்கள் எங்கே என்று விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன. சென்னை,காஞ்சி புரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சமீபத்தில் காணாமல் போன பெண் கள் குறித்த விவரங்கள் சேகரிக் கப்பட்டு வருகின்றன என்றனர்.