Published : 25 Jan 2019 09:53 AM
Last Updated : 25 Jan 2019 09:53 AM

மூத்த பெருமக்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைக்கான வழிமுறைகள்: சென்னையில் வரும் 29-ம் தேதி விவாத அரங்கம்

மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றம் சார்பில் ‘மூத்த பெருமக்க ளின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைக் கான வழிகள்’ என்ற தலைப்பில் விவாத அரங்கம் வரும் 29-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக அம்மன்றத்தின் செயலர் ஆர்.சுப்பராஜ் கூறிய தாவது: இன்றைய மூத்த பெரு மக்கள் குழந்தைகளாக இருந்த காலகட்டமும், இன்றைய தலை முறை குழந்தைகள் வளரும் காலகட்டமும் வெவ்வேறானவை. இதனால் இவர்களுக்கு இடை யிலான இடைவெளி அதிகரித்து விடுகிறது. மேலும் அரசுக்கும், மூத்த பெருமக்களுக்குமான இடை வெளியும் அதிகமாக உள்ளது. அதனால் அரசு-மூத்த பெருமக்கள், குழந்தைகள்- மூத்த பெருமக்கள் ஆகியோர் இடையே பாலம் அமைத்து, இடைவெளியை குறைத்து மூத்த பெருமக்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கான வழிகளைத் தேடி, ‘மூத்த பெருமக்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைக்கான வழிகள்’ என்ற தலைப்பில் விவாத அரங்கம் நடைபெற உள்ளது. இது, வரும் 29-ம் தேதி, ஆழ்வார்பேட்டை யில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த விவாத அரங்கில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.ராகவன், ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் ஜி.ஒளிவண் ணன், லயன்ஸ் சங்க முன்னாள் ஆளுநர் என்.ஆர்.தனபாலன், மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி, மற்றும் பல்வேறு துறையினர் பங்கேற்க உள்ளனர்.

இதில், பல்வேறு மூத்த பெரு மக்கள் சங்கத்தினர் பங்கேற்று, தங்கள் கருத்துகள், தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அதை தீர்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x