மேகேதாட்டு அணை கட்ட அனுமதியே தரவில்லை: தமிழக அரசின் மனு அர்த்தமற்றது, தள்ளுபடி செய்யவேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

மேகேதாட்டு அணை கட்ட அனுமதியே தரவில்லை: தமிழக அரசின் மனு அர்த்தமற்றது, தள்ளுபடி செய்யவேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
Updated on
1 min read

மேகேதாட்டு அணை கட்ட ஆய்விற்காக மத்திய அரசு அனுமதி அளித்ததாக அதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு மனு அர்த்தமற்றது தள்ளுபடி செய்யவேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளது.

மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பான விரிவான ஆய்வறிக்கைக்கு (DPR) தயாரிக்கவே மட்டுமே அனுமதி அளித்துள்ளோம். இந்த அனுமதி என்பது அணை கட்டுவதற்கு கொடுத்த அனுமதி கிடையாது, எனவே இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது அல்ல, தீர்ப்பை அவமதிக்கும் செயலும் அல்ல

மேலும் அணை கட்டுவது தொடர்பான ஆய்வறிக்கையை தீர்ஆராய்ந்து பார்த்து, மத்திய நீர் ஆணையத்தின் நிபுணர்கள் சம்மந்தப்பட்ட இடத்தை  பார்த்த அதன்பின்னர் அந்த அணை தேவைதானா என்பதை தீர ஆரய்ந்து அவர்கள்  முடிவெடுத்த பின்னர், அந்த அறிக்கை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் ஆலோசனை குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

அந்த ஒப்புதல் என்பது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலோடு,  அனுமதியோடு இணைந்துதான் வழங்கப்படும்.  மேகேதாட்டு  அணை விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசிக்கப்படும்

அதேபோல காவிரி டெல்டா விவசாயிகளின் நலனுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் எந்த முடிவும் எடுக்கப்படாது. எனவே அணைக்கான கட்டுவதற்கான அனுமதியே வழங்காதபோது தற்போது தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு அர்த்தமற்றது, அவர்கள் மனுவில் கூறும் தகவல்கள் தவறானவை.

அதனால் தமிழக அரசு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். என மத்திய அரசு மனுவில் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in