Last Updated : 09 Jan, 2019 08:18 AM

 

Published : 09 Jan 2019 08:18 AM
Last Updated : 09 Jan 2019 08:18 AM

புழல், திருச்சி, வேலூர் மகளிர் சிறைகளில் ஸ்கேனர் வசதி

தமிழகத்தில் உள்ள புழல்- 1, புழல்- 2, திருச்சி, மதுரை, கோவை, சேலம், பாளையங்கோட்டை, வேலூர், கடலூர் ஆகிய 9 மத்திய சிறைகளிலும் செல்போன் பயன்பாட்டைத் தடுப்பதற்காக ஏற்கெனவே ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

அதேபோல, கைதிகளைப் பார்க்கும் உறவினர்கள் அளிக்கக்கூடிய பழங்கள், ஆடைகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லும்போதும், சிறை நிர்வாக பயன்பாட்டுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும்போதும் அவற்றுக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை மறைத்துவைத்து கைதிகளும், சில காவலர்களும் சிறைக்குள் எடுத்துச் செல்கின்றனர். இவற்றை கண்டறிந்து தடுப்பதற்காக 9 மத்திய சிறைகளிலும் 'எக்ஸ்ரே பேக்கேஜ் ஸ்கேனர்' பொருத்தப்பட்டுள்ளது.

விரைவில் கருவிமகளிர் சிறைகள், மாவட்டச் சிறைகள், பார்ஸ்டல் பள்ளி போன்றவற்றிலும் இதேபோன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர சிறைத்துறை நிர்வாகம் தற்போது முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக புழல், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களிலுள்ள மகளிர் சிறைகள், இளம் குற்றவாளிகளை அடைக்கக்கூடிய புதுகை பார்ஸ்டல் பள்ளி ஆகியவற்றில் 'எக்ஸ்ரே பேக்கேஜ் ஸ்கேனர்' கருவி விரைவில் பொருத்தப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x