

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக திருச்சி வந்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வது, மோடியின் திட்டங்களால் பலன் பெற்றவர்களின் வீடுகளுக்குச் சென்று தாமரை தீபம் ஏற்றுவது, தொண்டர்களின் வீடுகளில் தொண்டர்களின் குடும்பத்தாரை பாஜகவுடன் இணைப்பது போன்ற பல்வேறு திட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ‘எங்கள் குடும்பம் பாஜக குடும்பம்', ‘எங்கள் வீடு பாஜக வீடு', ‘எங்கள் வாக்குச்சாவடி பலமான வாக்குச்சாவடி' போன்ற பிரச்சார நிகழ்ச்சிகளையும் மேற்கொள்ள உள்ளோம்.
அஜித் ரசிகர்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொண்ட சுமார் 2 ஆயிரம் பேர் பாஜகவில் இணைந்தனர். நல்ல நடிகரின் ரசிகர்களான நீங்கள், இனி நல்ல தலைவரான மோடியின் வழியில் செயல்படுங்கள் என்றுதான் கூறினேன் என்றார்.