

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்தில் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரையிடம் 4 மணி நேரம் விசாரணை நடந்தது.
முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. பிப்ரவரி இறுதிக்குள் விசாரணை ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் விசாரணை தீவிரப்படுத்தப்பட் டுள்ளது.
இதன்படி, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள், அப்போலோ மருத்துவர்கள் உட்பட அனைவரி டமும் ஏற்கெனவே விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவுக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவும் சிகிச்சை அளித்தார். அவரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தப்படு கிறது.
சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் ஆறரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, நேற்று காலை 10.15 மணி அளவில் விசாரணை ஆணையத்துக்கு வந்தார். அவரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் வெளியே வந்த தம்பிதுரை, செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ஆணையத்தில் கூறிய விவரங் களை பொதுவெளியில் சொல்ல விரும்பவில்லை. ஆணையத்தில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விக ளுக்கும் பதில் அளித்து இருக் கிறேன்” என்றார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விசாரணை ஆணையத் தில் இன்று ஆஜராக சம்மன் அனுப் பப்படிருந்தது. அவர் தரப்பில் அவகாசம் கேட்டதால் வரும் 29-ம் தேதி ஆஜராகும்படி அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.