Published : 23 Jan 2019 09:40 AM
Last Updated : 23 Jan 2019 09:40 AM

சென்னையில் தங்கம் விலை பவுன் ரூ.24,768-க்கு விற்பனை 

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.128 உயர்ந்து, ரூ.24,768-க்கு விற்கப்பட்டது.

சர்வதேச சந்தையில் சில தினங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தவண்ணம் இருந்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது. இதனால் உள்ளூரிலும் தங்கத்தின் விலை மாறுபடுகிறது. சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.16 அதிகரித்து ரூ.3,096-க்கும், பவுனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.24,768-க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் கிராம் ரூ.3,080-க்கும், பவுன் ரூ.24,640-க்கும் விற்பனையானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x