நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 8 அடி உயரத்தில் இருந்து விழுந்த அர்ச்சகர் உயிரிழப்பு: பாதுகாப்பை மேம்படுத்த பக்தர்கள் கோரிக்கை

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 8 அடி உயரத்தில் இருந்து விழுந்த அர்ச்சகர் உயிரிழப்பு: பாதுகாப்பை மேம்படுத்த பக்தர்கள் கோரிக்கை
Updated on
2 min read

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு மாலை அணிவித்து விட்டு கீழே இறங்க முற்பட்டபோது 8 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த அர்ச்சகர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாமக்கல் கோட்டை சாலையைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (55). நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள தனியார் நூற்பாலையில் உதவி பொதுமேலாளராக கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவரது தம்பி நாகராஜன் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகராக உள்ளார்.

இவருக்கு உதவியாக அவ்வ போதும், விடுமுறை நாட்களிலும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வெங்க டேசன் செல்வது வழக்கம். இதன் படி கடந்த 27-ம் தேதி வெங்க டேசன், ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று பூஜையில் ஈடுபட்டுள்ளார். 18 அடி உயரம் உள்ள ஆஞ்ச நேயர் சுவாமிக்கு மாலை அணிவித் தல், அபிஷேகம் செய்தல் போன்ற வற்றுக்காக சிலையைச் சுற்றி சட் டம் அமைக்கப்பட்டுள்ளது. வெங் கடேசன் 8 அடி உயரத்தில் இருந்த சட்டத்தில் நின்றபடி சுவாமிக்கு மாலைகளை அணிவித்தார். தொடர்ந்து அவர் கீழே இறங்கு வதற்காக பின்புறமாக காலை நகர்த்தியபோது எதிர்பாராத வித மாக 8 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் மயங்கினார். சக அர்ச்சகர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச் சைக்காக சேலத்தில் உள்ள தனி யார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந் தது. எனினும், நேற்று முன்தினம் நள்ளிரவு வெங்கடேசன் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் எதிரே கோட்டை சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப் பட்டு, பின்னர் அடக்கம் செய்யப் பட்டது. இதனிடையே நேற்று ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் சுவாமி கோயில் பிரதான வாயில் கதவுகள் அடைக்கப்பட்டன. பின்னர், மாலையில் வழக்கம்போல் வாயில் கதவுகள் திறக்கப்பட்டன.

வெங்கடேசன் கீழே விழுந்த போது அடிபட்டதில் கர்ப்ப கிரகத் தில் ரத்தம் சிந்தியுள்ளது. அதை கோயில் பணியாளர்கள் சுத்தம் செய்தனர். தொடர்ந்து பரிகார பூஜை செய்யப்பட்டது. இதுபோல், நேற்றும் வெங்கடேசன் உடல் அடக் கம் செய்யப்பட்ட பின்னர் கோயி லில் பூஜைகள் நடைபெற்றன.

உயிரிழந்த அர்ச்சகர் வெங்க டேசனுக்கு, ஜெயலட்சுமி (48) என்ற மனைவி, அரவிந்த் (25) என்ற மகன் உள்ளனர். அரவிந்த் சென்னையில் சாப்ட்வேர் நிறு வனம் ஒன்றில் பணி செய்து வரு கிறார். வெங்கடேசனின் தந்தை ராதாகிருஷ்ணன் என்பவரும் கோயில் அர்ச்சகராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கோயிலில் அர்ச்சகர்கள், பாதுகாப்பாக பூஜை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மத்தி யில் கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து கோயில் செயல் அலு வலரும், உதவி ஆணையருமான ரமேஷ் கூறும்போது, "அர்ச்சகர் வெங்கடேசன் உயிரிழந்ததை யடுத்து எடுக்க வேண்டிய பாது காப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். லிப்ட் வைக்க முடியுமா என பரிசீ லிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த வெங்கடேசன் குடும்பத்துக்கு கோயில் மூலம் நிதியுதவி அளிப் பதற்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், வெங்கடே சன் குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்கப்படும்" என்றார்.

கடந்த 27-ம் தேதி அர்ச்சகர் வெங்கடேசன், 8 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in