Published : 30 Jan 2019 11:28 AM
Last Updated : 30 Jan 2019 11:28 AM

பிப்.13 முதல் 22-ம் தேதிக்குள் பிளஸ் 1 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்த ராதேவி அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கு முன்பாக செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும்.

பிளஸ் 1 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை பள்ளித் தலைமை ஆசிரியர்களும், முதன்மைக் கண்காணிப்பாளர் களும் பிப்ரவரி 1 முதல் 9-ம் தேதி வரை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில், தங்களுக்கு வழங்கப்பட்ட யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். புதிய பாடத் திட்டத்தின்படி, பிளஸ் 2 செய்முறைத் தேர்வுக்கான வழிமுறைகளையே பின்பற்றி செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 13 முதல் 22-ம் தேதி வரையிலான நாட்களில் கண் டிப்பாக நடத்த வேண்டும். உரிய ஆவணங்களுடன் செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டி யலை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் பிப்ரவரி 23-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

முதன்மைக் கல்வி அலுவலர்கள் பிப்ரவரி 18 முதல் 23-ம் தேதி வரை செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதோடு மதிப்பெண் பட்டியலை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் பிப்ரவரி 26-ம் தேதி ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x