பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட புகார்: மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு

பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட புகார்: மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு
Updated on
1 min read

மாங்காடு பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட புகாரில் பத்திரிகை செய்தி அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விளக்கமளிக்க சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் சென்னையிலும் பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டதாக புகார் எழுந்தது. சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த 27  வயது திருமணமான பெண் ஒருவர்தான் புகார் அளித்தவர். ஒரு பெண் குழந்தைக்கு தாயான அவர் மீண்டும் கர்ப்பம் தரித்தநிலையில் மாங்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் தினமும் பரிசோதனை செய்து வந்தார்.

8 மாத கர்ப்பிணியான அவருக்கு, உடலில் ரத்தம் குறைவாக இருப்பதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறும் டாக்டர் அறிவுறுத்தியதன்பேரில் கடந்த ஏப். 5-ம் தேதி அந்தப்பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு, 2 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்ட பின்னர் வழக்கம் போல் மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி, சுதாவுக்கு நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில் எச்.ஐ.வி இருப்பதாக கண்டறியப்பட்டது. இது குறித்து புகார் அளித்த போது மருத்துவர்கள் தம்மை மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார்.

பலமுறை புகார் அளித்தும் தனது புகார் யார் கவனத்துக்கும் எடுத்துக்கொள்ளப்படவில்லை என அப்பெண் பேட்டி அளித்திருந்தார். அவரது பேட்டி ஊடகங்களில் வெளியானது. ஊடகங்களில் வெளியான பேட்டியை அடுத்து தற்போது இந்த விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரம் போல் சென்னை மாங்காட்டை சேர்ந்த பெண்ணும் ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டதாக தமிழ் நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்காக எடுத்துள்ளது

இந்த வழக்கில் தமிழக அரசின் சுகாதார துறை முதன்மை செயலாளர், மருத்துவ கல்வி இயக்கக இயக்குனர், மாநில  எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய திட்ட இயக்குனர் ஆகியோருக்கு நோடீஸ் அனுப்பிய மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன், மாங்காடு பெண்ணுக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தியது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் அலட்சியம் காட்சியது தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in