ரஷ்யாவில் தீப்பிடித்த கப்பலில் குமரி இளைஞர் மாயம்

ரஷ்யாவில் தீப்பிடித்த கப்பலில் குமரி இளைஞர் மாயம்
Updated on
1 min read

தான்சானியா நாட்டைச் சேர்ந்த 2 சரக்கு கப்பல்கள் கடந்த 21-ம் தேதி ரஷ்ய கடல் பகுதிக்கு உட்பட்ட கெர்ச் வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருந்தன. ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிவாயுவை மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 2 கப்பல்களிலும் தீப்பற்றியது. இதில் 16 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. உயிர் தப்புவதற்காக கடலில் குதித்த பலர் மாயமானதாகவும் கூறப்படுகிறது.

தீ விபத்தில் சிக்கிய மேஸ்ட்ரோ என்ற கப்பலில் கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறையைச் சேர்ந்த சகாயராஜ் என்பவரது மகன் செபாஸ்டின் பிரிட்டோ (24) பணியில் இருந்துள்ளார். விபத்தை தொடர்ந்து அவர் மாயமாகி விட்டதாகவும், அவரைத் தேடும் பணியில் ரஷ்ய கடற்படை ஈடுபட்டு வருவதாகவும் அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

மெரைன் இன்ஜினியரிங் படித்துள்ள அவரது நிலை என்ன? என்பது தெரியாததால் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். செபாஸ்டின் பிரிட்டோ குறித்த தகவல்களை கண்டறிந்து தெரிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in