Published : 04 Jan 2019 09:20 AM
Last Updated : 04 Jan 2019 09:20 AM

3 நாட்களில் 21 டன் பிளாஸ்டிக் பறிமுதல்

சென்னை மாநகராட்சியில் கடந்த 3 நாட்களில் 21.67 டன் தடை செய் யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து சென்னை மாநக ராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத் தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங் களது வீடு, அலுவலகம், தொழிற் கூடங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் உணவு விடுதிகளில் உள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தங்களது பகுதிக் குட்பட்ட வார்டு அலுவலகங்களில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஒப்ப டைக்குமாறு வேண்டுகோள் விடுக் கப்பட்டது. அதனடிப்படையில் சுமார் 1.88 டன் பிளாஸ்டிக் பொருட் களை கடந்த 31-க்குள் பொது மக்களே மாநகராட்சி நிர்வாகத்தி டம் ஒப்படைத்தனர்.

மேலும் ஜனவரி 1 முதல் பல்வேறு வணிக வளாகங்கள், உணவகங்கள், கடைகளில் மாநக ராட்சி கண்காணிப்பு குழுவினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கடந்த 3 நாட்களில் மொத்தம் 21.67 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக்கை பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்ந்து மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை சார்பாக 15 மண்ட லங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைத்தாலோ, விற்பனை செய்தாலோ, உபயோகப்படுத்தி னாலோ பறிமுதல் செய்யப்பட்டு தகுந்த நடவடிக்கை மேற்கொள் ளப்படும். எனவே, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை சம்பந்தப்பட்ட அலுவலகங் களில் ஒப்படைத்து பிளாஸ்டிக் மாசில்லா சென்னையை உரு வாக்க ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x