வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
Updated on
1 min read

தூத்துக்குடியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களை சந்தித்து கனிமொழி எம்பி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் எந்த போராட்டத்துக்கும் பலன் இல்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை அழைத்து பேசாமல் தமிழக அரசு மிரட்டி வருகிறது. திமுக ஆட்சிக்கு வரும்போது உங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வழியாக பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றன. எனவே வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும்” என்றார்.

தொடர்ந்து, தூத்துக்குடி ஏபிசி மகாலெட்சுமி மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவியர் சங்க நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும். சமூகம் போட்டுள்ள கோட்டுக்குள்தான் செல்ல வேண்டும் என்றால் புரட்சியும், மாற்றமும் வராது. சில எல்லைக்கோடுகளை தாண்டத்தான் வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in