Published : 17 Jan 2019 08:17 AM
Last Updated : 17 Jan 2019 08:17 AM

பாலமேடு ஜல்லிக்கட்டில் கார், பைக்குகள் பரிசு; சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்: மாடுபிடி வீரர்கள் 55 பேர் காயம்

ஒய்.ஆண்டனிசெல்வராஜ்/எஸ்.சன்னாசி

மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று விறுவிறுப்பாக நடந்தது. வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை, அடக்கி வெற்றிபெற்ற சிறந்த வீரர்களுக் கும், சிறந்த காளைகளின் உரிமை யாளர்களுக்கும் விதவித மான பரிசுகள் வழங்கப்பட்டன.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று காலை 8 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன், எஸ்பி மணிவண் ணன், சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாடுபிடி வீரர்கள் விதிகளுக்குக் கட்டுப்படுவதாக உறுதிமொழி ஏற்றபின் ஜல்லிக் கட்டு தொடங்கியது.

மொத்தம் 988 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 846 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்திருந்த னர். மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தலைமையில், 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணிகளை மேற் கொண்டனர். கால்நடை மருத்து வர்கள், வாடிவாசலுக்கு முன்பாக காளைகளை மீண்டும் மறுபரி சோதனை செய்தனர். மாடுபிடி வீரர்கள் 75 பேர் வீதம் சுழற்சி முறையில் களமிறக்கப்பட்டனர்.

முதலில் ஊர் கிராம மகாலிங்க சுவாமி பொதுமடத்து கோயில் காளை, வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அந்த காளையை வீரர்கள் யாரும் பிடிக்காமல் ஒதுங்கி கொண்டனர். அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இதில், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடியில் சிக்காமல் நழுவிய காளைகளின் உரிமை யாளர்களுக்கும் தங்கக் காசு, வெள்ளிக் காசு, சைக்கிள், டிவி, சேர், மிக்ஸி, கிரைண்டர், அண்டா, மற்றும் ஆட்டோ டயர்கள் உள்ளிட்ட விதவிதமான பரிசுகள் வழங்கப் பட்டன. பார்வையாளர்கள் வீரர் களை கைதட்டி உற்சாகப்படுத்தி னர். சில காளைகள் வீரர்களிடம் சிக்காமல் துள்ளிக்குதித்து ஓடின. சில காளைகள் கூட்டத்தை கண்டு மிரண்டு வாடிவாசலுக்குள் திரும்புவதும், பார்வையாளர்கள் தடுப்பு வேலிகளை உடைத்து தப்பிக்க முயல்வதுமாக போட்டி பரபரப்பாக நடைபெற்றது.

போட்டியில் மொத்தம் 55 பேர் படுகாயம் அடைந்தனர். இதில், 15 பார்வையாளர்களும் அடங்குவர். காயமடைந்த 15-க்கும் மேற்பட் டோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

காளைகளை அடக்கிய வீரர்க ளுக்கு அடுத்த நொடியே பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங் கேற்ற அனைத்து காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த காளைகள், சிறந்த மாடுபிடி வீரர்கள் பட்டியலை தயார் செய்து போட்டியின் முடிவில் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது. இதைக் காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் பார்வையாளர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். இந்த போட்டியில் களம் இறங்க 800-க்கும் மேற்பட்ட காளைகள், 800-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். போட்டியை காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை மட்டுமே நடத்த முடியும். அதனால், முன்பதிவு செய்துள்ள அனைத்து காளைகளையும் களமிறக்க முடியுமா என்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x