அப்போலோ ப்ரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு; ஆரோக்கிய வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும்: இளைஞர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுரை

அப்போலோ ப்ரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு; ஆரோக்கிய வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும்: இளைஞர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுரை
Updated on
2 min read

ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் சார்பில் சென்னை தர மணியில் புதிதாக கட்டப்பட்ட அப்போலோ ப்ரோட்டான் புற்று நோய் சிகிச்சை மையத்தின் (APOLLO PROTON CANCER CENTRE) திறப்பு விழா நேற்று நடந்தது. அப்போலோ மருத்துவ மனைகள் குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டி விழாவுக்கு தலைமைத் தாங்கினார். துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி, நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அப்போலோ ப்ரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

சுகாதார குறியீடுகளை பொறுத்த வரை, இந்தியா சுதந்திரத்துக்கு பின் னர் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. தனியார் மருத்துவ வசதிகளை கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும். உயர்ந்த மருத்துவ சிகிச்சை அனைவருக்கும் குறைந்த செலவில் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் ஆயுஷ் மான் பாரத் திட்டம் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு விரிவான மருத்துவ காப்பீடு வழங்குகிறது. புற்றுநோய், இதய நோய்கள், நுரையீரல் நோய்கள் போன்றவை கள் பெரும்பான்மையான இறப்பு களுக்கு காரணமாக உள்ளது. இதற்கு நவீன கால வாழ்க்கை முறை மாற்றம் முக்கிய காரண மாகும். இந்தியாவில் நிகழும் மரணங்களுக்கு புற்றுநோய் இரண்டாவது காரணமாக உள்ளது.

மருத்துவ சுற்றுலா மையம்

இந்தியா மருத்துவ சுற்றுலா மையமாக உருவெடுத்து வருகிறது. இளைஞர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளில் கவனம் செலுத்த வேண்டும். சமச்சீர் உணவு, ஆரோக்கிய உணவு ஆகியவற்றை மட்டுமே உட்கொண்டு முறையாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆரோக்கியமான நாடுதான் வள மான செழிப்பான நாடாகவும் திக ழும். தமிழகத்தில் அற்புதமான உணவு வகைகள் உள்ளன. தமிழக உணவுகளுடன் உலகில் எந்த உணவும் போட்டி போட முடியது.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் கே.பழனிசாமி பேசும் போது, “இந்தியாவில் உயரிய மருத்துவ சேவை பெற வசதி யுள்ள இடமாக தமிழகம் கருதப் படுகிறது. தமிழகம் மருத்துவ சுற்றுலாவின் தலைமையிடமாக விளங்குகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை 27.73 லட்சம் பேர், ரூ.5,426.74 கோடி காப்பீட்டுத் தொகையில் சிகிச்சை பெற்றுள்ளனர். தேசிய புற்றுநோய் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகளில் புற்றுநோய் சிகிச்சை பிரிவுகள் வலுப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன” என்றார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “இன்றைய நாக ரிக உலகில் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், பலவகையான புற்றுநோய்களை குணப்படுத்திட முடியும். ஆண்டுக்கு ஒருமுறை முழுஉடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என்றார்.

இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பி துரை, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத் தலைவர் ஜி.நாகேஸ்வரராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in