

பாஜக ஆட்சியின் பின்னணியில் சமயம், மதம் அடிப்படையில் பிரிவினை ஏற்படுத்தும் சக்திகள் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கட்சி நிர்வாகிகள் கார்த்திக் சிதம்பரம், கராத்தே தியாகராஜன், வள்ளல் பெருமான், விஜயதாரணி எம்எல்ஏ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது:
பாஜக ஆட்சியின் முதல் நூறு நாட்களை விமர்சிக்கமாட்டேன் என்று கூறியிருந்தேன். 130 நாட்கள் ஆகிவிட்டதால் இந்த அரசைப் பற்றி கூறுகிறேன். பிரச்சார பலத்தால்தான் கடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது . 31 சதவீத மக்களே பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மீதம் 69 சதவீதம் பேர் அவர்களை விரும்பவில்லை.
பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இன்சூரன்ஸ் மசோதா உள்ளிட்ட பல மசோதாக்களும் நிதிநிலை அறிக்கையில் காங் கிரஸ் அரசில் தயாரிக்கப்பட்டவை யாகும். தங்கம் இறக்குமதிக்கு காங்கிரஸ் விதித்த கட்டுப்பாடு நீடிக்கும் என்று கூறியுள்ளனர். இன்னும் 50 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இவர்கள்தான் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த ஆதார் அட்டை திட்டத்தை எதிர்த்தவர்கள்.
பிரதமர் நரேந்திர மோடி எந்த அமைச்சரையும் செயல் படவிடாமல் பொம்மைகளாக மாற்றி வைத்துள்ளார். செயலா ளர்களுக்கு அதிகாரத்தை கொடுத்துள்ளார். எல்லா அதிகாரங்களையும் தன் கையில் வைத்துள்ளார். இது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.
இந்தியாவை சமய, மத அடிப்படையில் பிரிக்கும் சக்திகள் பாஜக அரசின் பின்னணியில் இருக்கின்றன. அரசின் செயல்பாட்டில் ஆர்எஸ்எஸ் கொள்கை வெளிப்படையாகவே தெரிகிறது. அயோத்தியில் கோயில் கட்டவும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யவும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வரவும் இந்த சக்திகள் முயற்சிக்கின்றன.
இந்தியாவை சமய, மத அடிப்படையில் பிரிக்கும் சக்திகள் பாஜக அரசின் பின்னணியில் இருக்கின்றன. அரசின் செயல்பாட்டில் ஆர்எஸ்எஸ் கொள்கை வெளிப்படையாகவே தெரிகிறது. அயோத்தியில் கோயில் கட்டவும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யவும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வரவும் இந்த சக்திகள் முயற்சிக்கின்றன.
இதன் எதிரொலியாகவே கடந்த நான்கு மாதங்களில் உத்தரப்பிரதேசத்தில் 600 மதக் கலவர சம்பவங்கள் நடந்துள்ளன. பாஜகவை எச்சரிக்கிறோம். தேச ஒற்றுமையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க பிரதமர் மோடி முன்வர வேண்டும்.
மத உணர்வை தூண்டு பவர்களை கண்டிக்க வேண்டும். அவர்கள் மீது வழக்கு போட்டு சிறையில் அடைக்க வேண்டும். இந்தியாவை வளமான நாடாக மாற்ற நடவடிக்கை எடுக்க முன்வாருங்கள்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
நிகழ்ச்சியில் கார்த்திக் சிதம்பரம் பேசும்போது, “ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸில் முதல்வர் வேட்பாளர்கள் இருக்கின் றனர். தமிழகத்திலும் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தி அப்படிப்பட்ட தலைவரின் கீழ் கட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தை அதிகப்படுத்த வேண்டும்’’ என்றார்.
பிரதமர் மோடி எந்த அமைச்சரையும் செயல்படவிடாமல் பொம்மைகளாக மாற்றி வைத்துள்ளார். செயலாளர்களுக்கு அதிகாரத்தை கொடுத்துள்ளார்.