Published : 26 Nov 2018 09:05 AM
Last Updated : 26 Nov 2018 09:05 AM

தமிழகம், புதுவையில் ஐஓசி, பிபிசில் மற்றும் எச்பிசிஎல் நிறுவனங்கள் சார்பில்புதிதாக 5,257 பெட்ரோல் பங்க்குகள் திறக்க முடிவு: டீலர்கள் நியமனத்துக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியன் ஆயில், பாரத் பெட் ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் சார்பில், புதிதாக 5,257 பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான டீலர்கள் நியமனத்துக்கு விண்ணப் பிக்கவும் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான செயல் இயக்குநர் ஆர்.சித்தார்த்தன், தலைமை பொது மேலாளர் வி.கோபாலகிருஷ்ணன், பொது மேலாளர் எஸ்.அண்ணா மலை, இந்துஸ்தான் பெட்ரோலி யம் நிறுவனத்தின் பிராந்திய சில்லறை விற்பனை தலைவர் சந்தீப் மகேஸ்வரி மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மாநில சில்லறை விற்பனை தலைவர் வி.நாகராஜன் மற்றும் ஐஓசி பொதுமேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்) சபீதா நட்ராஜ் ஆகியோர் கூட்டாக, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டில் வாகனங்களின் எண் ணிக்கை அதிகரித்து வருவதற் கேற்ப பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. சில்லறை விற்பனையும் அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பங்க்கு கள் அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் 5,125 பெட்ரோல் பங்க்குகளும் புதுச்சேரி யில் 132 பங்க்குகளும் புதிதாக திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக, டீலர்களை நியமிக்கப் படவுள்ளனர். அவர்கள் விண்ணப்பிப்பதற்காக புதிய வழிகாட்டி கையேடு வௌி யிடப்பட்டுள்ளது. இதில், எளிதான முறையிலும் வௌிப்படைத் தன்மையுடனும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான விதிமுறை கள் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும், பெட்ரோல் பங்க் அமைக்க நிலம் இருப்பவர்களும் நிலம் இல்லாதவர்களும்கூட விண்ணப்பிக்கலாம். எனினும், அவர்கள் கேட்கப்படும்போது தங்களிடம் நிலம் இருப்பதைக் காண்பிக்க வேண்டும்.

ரூ.35 லட்சம் - ரூ.80 லட்சம் வரை

மேலும், முதன்முறையாக கணினி மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். நகர்ப்புறங் களில் பெட்ரோல் பங்க்குகள் அமைக்க ரூ.65 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரையிலும் கிராமப் பகுதிகளில் அமைக்க ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை செலவா கும். இந்த புதிய பங்க்குகள் நெடுஞ்சாலை பகுதிகள், வயல் வெளிகள் மற்றும் தொழிற்சாலை கள் அமைந்துள்ள பகுதிகளில் அமைக்கப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு www.petrolpumpdealerchayan.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சமையல் எரிவாயு

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சித்தார்த்தன் கூறியதாவது:

‘‘பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோலின் அளவு மற்றும் தரம் குறைவாக இருந்தாலோ, அல்லது வேறு ஏதேனும் மோசடிகள் நிகழ்ந்தாலோ அதுகுறித்து எண்ணெய் நிறுவனங்களிடம் புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய விசாரணை நடத்தி சம்பந் தப்பட்ட பங்க்கின் உரிமம் ரத்து செய்யப்படும்.

சமையல் எரிவாயு சிலிண் டர்களில் எடை குறைவாக இருந்தாலோ அல்லது விநியோ கிக்க கூடுதல் பணம் கேட்டாலோ அதுகுறித்தும் நுகர்வோர் சம்பந்தப் பட்ட ஏஜென்சி குறித்து எண்ணெய் நிறுவனங்களிடம் புகார் அளிக்க முன்வர வேண்டும். இதனால் சிலிண்டர் விநியோகத்தில் ஏதே னும் பிரச்சினை வரும் என அச்சம் கொள்ளத் தேவையில்லை’' என் றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x