Published : 15 Apr 2014 10:29 AM
Last Updated : 15 Apr 2014 10:29 AM

திமுக-வை மக்கள் புறக்கணிச்சிட்டாங்க: சிரிப்பு நடிகர் சிங்கமுத்து சிறப்புப் பேட்டி

அதிமுக வெற்றிக்காக தமிழகத்தில் 32 தொகுதிகளில் 320 இடங்களில் சூறாவளிப் பிரச்சாரத்தை முடித் திருக்கிறார் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து. இடையில் சென்னை திரும்பி இருந்த அவர் ‘தி இந்து’ வுக்கு அளித்த பேட்டி.

நீங்கள் பிரச்சாரத்துக்கு சென்ற இடங்களில் மக்கள் சந்தோஷமா இருக்காங்களா.. அதிமுக ஆட்சியைப் பற்றி என்ன சொல்றங்க?

தமிழ்நாடு முழுக்க அம்மா அலை வீசுது தம்பி.. ஆடு, மாடு, வீடுன்னு அம்மா அறிவிச்ச திட்டங்கள் குக்கிராமம் வரை போய் சேர்ந்திருக் குல்ல. மக்களோட முகத்துல என்ன பிரகாசம்ன்றீங்க.. திமுக ஆட்சி யில மந்திரிகள வெரட்டி அடிச்சாங் களே அந்த நிலைமை இப்ப சுத்தமா இல்லை. அம்மா, படிக்கிற புள்ளைங்களுக்கு லேப்டாப் குடுத் துருக்காங்க. இதையெல்லாம் மக்கள் பேசுறாங்கள்ல.

சிரிப்பது யார் அழுவது யார் என்று தேர்தலுக்குப் பிறகு தெரியும் என்று தா.பாண்டியன் அதிமுக-வை சாடி இருக்கிறாரே?

தேர்தலுக்கு முன்னாடி எல்லாக் கட்சியுமே இப்படித்தான் டயலாக் பேசி ஆகணும். இல்லாட்டா, விழு குற ஒண்ணு ரெண்டு ஓட்டும் விழு காம போயிரும்ல.. கம்யூனிஸ்ட் களுக்கு ரெண்டொரு தொகுதிகள்ல செல்வாக்கு இருக்கலாம். குடும்பச் சண்டையில திமுக-வை மக்கள் புறக்கணிச்சிட்டாங்க. மக்கள் ஆதரிக்கும் இயக்கமா அதிமுக தான் இருக்கு.

இந்த முறை மாநிலக் கட்சிகள் அதிகமான இடங்களைப் பிடிக்கும். அப்படியொரு சூழல் வந்தால் திற மையானவங்க பிரதமரா வரணும். ராணுவ கப்பல் மூழ்குது, ஹெலி காப்டர் எரியுது, துப்பாக்கி எல்லாம் பழசா போச்சு. இது எல்லாத்தை யும் மாத்தி நம்ம நாட்டோட ராணு வத்தை பலப்படுத்தணும். அதுக்கு சரியான நபர் யார்னு தேடுனப்ப மம் தாவுக்கே அம்மா முகம்தான் ஞாப கம் வந்துருக்கு. இதுபுரியாம கம்யூ னிஸ்ட்கள் அழுகுறேன்.. சிரிக்கி றேன்னு சினிமா வசனம் பேசிக்கிட்டு இருக்காங்க.

தேர்தலுக்கு பிறகு அதிமுக உள் ளிட்ட யாருடைய தயவும் எங்க ளுக்கு தேவை இருக்காது என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லி இருக்கிறாரே?

இப்ப அப்படித்தான் பேசுவாங்க. என்னென்ன கூத்து நடக்குதுன்னு தேர்தலுக்கு அப்புறம் பாருங்க. அண்ணன் வைகோ ஈழத் தமிழர் களுக்காகவே தன்னை அர்ப்பணித் துக் கொண்டவர். அவருக்கு இங்க இருக்கிற தமிழனைப் பத்தி சிந் திக்க நேரம் இருக்காது. மகனுக்கு மந்திரிப் பதவி வருதுன்னா ராம தாஸ் எந்தப் பக்கம் வேணும்னாலும் போவாரு. விஜயகாந்த் எந்த நேரத்துல என்ன குழப்பத்தை உண்டாக்குவாரோன்னு அந்தக் கூட்டணியில இருக்க எல்லா தலைவர்களும் வயித்துல புளியக் கரைச்சிக்கிட்டு இருக்காங்க. இதை எல்லாம் மறந்துட்டு பொன். ராதாகிருஷ்ணனுக்கு யாரு இப்படி எல்லாம் பேசச் சொல்லிக் குடுக் குறாங்கன்னு தெரியலியேங்க..

திமுக ஊழலைப் பற்றி பிரச்சாரம் பண்றீங்க.. ஆனா, உங்கள் தலைவி ஜெயலலிதா மேலயும் சொத்துக் குவிப்பு வழக்கு இருக்கே?

யாரும் யார் மேலயும் வழக்குப் போடலாம். வடிவேல் குடுத்த புகார்ல என்னைக்கூடத்தான் கைது பண்ணுனாங்க. அப்புறம், ’ஒண்ணு மில்லை’ன்னு போகச் சொன் னாங்க. அம்மா மேல இருக்கிறது பொய் கேஸ். அதுவும், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கு அல்ல.. 66 கோடிக்கு சொத்துச் சேர்த்ததா வழக்கு. பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு இடம் வாங்கிப் போட்டேன். அது இப்ப லட்ச ரூபாய்க்கு மேல விலை ஏறிடுச்சு. அதுபோல, அம்மா சினிமா வுல நடிச்சு சம்பாதிச்சு வாங்குன சொத்துக்களோட மதிப்பும் விலை ஏறியிருக்காதாக்கும். எப்படியாச் சும் அம்மாவை தண்டிக்க மாட்டாங் களான்னு கருணாநிதி குடும்பம் ஆசைப்படுது. மக்கள் நல்லா இருக் கணும்னு அம்மா ஆசைப்படுறாங்க. யாரோட ஆசை ஜெயிக்குதுன்னு பார்க்கத்தானே போறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x