

லஞ்சம் இல்லாத ஆட்சி, யாருக்கும் அஞ்சாத நீதி, நேர்மையான தேர்தல் ஆகியவற்றை மக்களோடு இணைந்து உருவாக்குவோம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து வீடியோவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். லஞ்சம் இல்லாத ஆட்சி, யாருக்கும் அஞ்சாத நீதி, நேர்மையான தேர்தல் ஆகியவற்றை மக்களோடு இணைந்து உருவாக்குவோம். முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.