Published : 09 Jan 2019 08:05 AM
Last Updated : 09 Jan 2019 08:05 AM

ஜெ. மரணம் தொடர்பாக லண்டன் மருத்துவரிடம் வீடியோ கான்பரன்ஸில் இன்று விசாரணை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று விசாரணை நடத் தப்படுகிறது.

ஜெயலலிதா மரணம் தொடர் பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள், அப்போலோ மருத்துவர்கள் உட்பட அனைவரிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவுக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவும் சிகிச்சை அளித்தார். இந்நிலையில், அவருக்கும் ஆறுமுகசாமி ஆணையம் கடந்த 27-ம் தேதி ‘இமெயில்’ மூலம் சம்மன் அனுப்பியிருந்தது. அதைத் தொடர்ந்து இன்று (9-ம் தேதி) வீடியோ கான்பரன்ஸ் மூலம் ரிச்சர்ட் பீலேவிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

லண்டனுக்கும் இந்தியாவுக்கும் 5.30 மணி நேரம் வித்தியாசம் உள்ளது. அதாவது, நமக்கு காலை 10 மணியாக இருக்கும்போது, லண்டனில் அதிகாலை 4.30 மணியாக இருக்கும். இதனால் ஆறுமுகசாமி ஆணையத்தினர் பிற்பகலுக்கு பிறகு அவரிடம் விசாரணை நடத்தலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ரிச்சர்ட் பீலே பேசும்ஒரு வீடியோ சமூக வலைதளங் களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை எடுத்தநபர் குறித்தும் அவரிடம் கேட்கப் படலாம் என்று கூறப்படுகிறது.

நாளை (10-ம் தேதி) அமைச்சர் விஜயபாஸ்கரும், 11-ம் தேதி மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரையும் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கஉள்ளனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகும் தேதி இன்னும் உறுதி செய்யப் படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x