Published : 08 Jan 2019 08:49 AM
Last Updated : 08 Jan 2019 08:49 AM

மத்திய தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் வேலைநிறுத்தம்: வங்கி சேவைகள், அரசுப் பணிகள் பாதிக்கும்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண் டும். விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18 ஆயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சமநிலை ஊதியம் வழங்க வேண்டும், போனஸ் மற் றும் வருங்கால வைப்பு நிதிக்கான தகுதி மற்றும் உச்சவரம்பை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியு றுத்தி, மத்திய தொழிற்சங்கங் களான ஐஎன்டியூசி, ஏஐடியூசி, சிஐடியூ, எச்எம்எஸ், டியூசிசி, ஏஐசி சிடியூ, எல்பிஎப் உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் சார்பில் இன் றும் (8-ம் தேதி), நாளையும் (9-ம் தேதி) நாடு தழுவிய அளவில் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

இப்போராட்டத்தில், அஞ்சல், வருமான, காப்பீட்டுத் துறை உள் ளிட்ட துறைகளில் பணியாற்றும் மத் திய அரசு ஊழியர்கள் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்க உள்ள தாக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலா ளர் துரைப்பாண்டியன் கூறினார். இப்போராட்டத்துக்கு வங்கி ஊழி யர் சங்கமும் ஆதரவு அளித்துள் ளது. தமிழகத்தில் வங்கி ஊழியர் கள் சுமார் 40 ஆயிரம் பேர் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மேற்கண்ட 12 கோரிக்கைகளுடன் வங்கிகளை தனியார்மயம் செய்யக் கூடாது, பொதுத்துறை வங்கிகளை வலுப் படுத்த வேண்டும், வங்கிகளை இணைக்கக் கூடாது, வாராக் கடன் களை வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி இப்போராட்டத் தில் வங்கி ஊழியர்கள் பங்கேற் பதாக அகில இந்திய வங்கி ஊழி யர் சங்கத்தின் பொதுச் செயலர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறினார்.

வங்கி ஊழியர்கள் போராட்டம் காரணமாக, வங்கி சேவைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், பணத்தட்டுப்பாடு ஏற்படு வதைத் தவிர்ப்பதற்காக, ஏடிஎம் களில் போதிய அளவு பணத்தை இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இப்போராட்டத்தில் மின் வாரியம், போக்குவரத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளதால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக் கும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பி னும், போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

போராட்டத்தின்போது அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப் பாட்டம், தர்ணா, கறுப்பு பேட்ஜ் அணிதல் உள்ளிட்ட போராட்டங்க ளில் ஈடுபடவும் அரசு ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். இப்போராட்டத் தில் மாநில அரசு ஊழியர்கள் பங் கேற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமி ழக அரசு எச்சரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x