

திமுக தலைமை அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: 1941-ல் தொடங்கப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளில் ஒன்றான ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் தமிழக தலைவர் ஷபீர் அஹமத், செயலாளர்கள் முஹமத் ஹனிஃபா, ஜமாலுதீன், அரசியல் செயலர் கே.எம்.சிராஜ் அஹமத், மக்கள் தொடர்பு செயலாளர் ஐ.ஜலாலுதீன் ஆகியோர் திங்கள்கிழமை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற ஆதரவு அளிப்ப தாக தெரிவித்தனர். இந்தச் சந்திப்பின்போது திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, வடசென்னை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் டாக்டர் மஸ்தான், தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா, செங்கை சிவம் ஆகியோர் உடனிருந்தனர்.