புயலால் சேதமடைந்த பொங்கல் பானைகள்: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை

புயலால் சேதமடைந்த பொங்கல் பானைகள்: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை
Updated on
1 min read

தை பொங்கலுக்கு தயாரிக்கப்பட்டி ருந்த சுமார் ஒரு லட்சம் மண் பானைகள் கஜா புயலால் சேத மடைந்ததையடுத்து மண்பாண்ட தொழிலாளர்கள் பெரும் துயரில் மூழ்கியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் லட்சக்கணக்கான வீடுகள், மரங்கள் புயலால் சேதமடைந்தன. இந்தப் புயல் மண்பாண்ட தொழி லாளர்களையும் விட்டுவைக்க வில்லை. பொங்கல் பண்டிகைக் காக கடந்த 6 மாதங்களாக குடும் பமே உழைத்து தயாரித்து வைத்திருந்த லட்சக்கணக்கான பானைகள், அடுப்புகள் உள்ளிட்ட மண்பாண்டங்கள் புயலால் முழு வதும் சேதம் அடைந்துவிட்டன.

இதனால், பொங்கல் பண்டி கையின்போது தமிழர்கள் பாரம் பரிய அடையாளமாக பயன்படுத்தி வந்த மண்பானையை இந்த பொங்கலுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தொழிலையே நம்பி இருந்த தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு லட்சம் மண்பாண்டங்கள்

இதுகுறித்து நெடுவாசலைச் சேர்ந்த சொ.சுந்தர்ராஜ் கூறியது: நெடுவாசலில் 50 குடும்பங் களைச் சேர்ந்த மண்பாண்ட தொழி லாளர்கள் வசிக்கின்றனர். மாவட் டத்தில் பிற பகுதிகளைவிட இங்கு தான் அதிகமான மண்பானைகள், குழம்புச் சட்டிகள், மூடிகள், அடுப்புகள், அகல் விளக்குகள் தயாரிக்கப்படும். பொங்கலுக்கு தேவையான மண் பானைகளை 6 மாதங்களுக்கு முன்பிருந்தே தயாரிக்கத் தொடங்கினோம். குளத்தில் இருந்து களிமண்ணை எடுத்துவந்து, பக்குவப்படுத்தி தயாரிக்கப்பட்ட மண் பானை, அடுப்பு உள்ளிட்டவற்றை வெயி லில் காயவைத்து வீட்டுக்குள் வைத்திருந்தோம்.

மார்கழி மாதம் பிறந்துதான் மண்பாண்டங்களை சூளையில் வைத்து சுட்டு, விற்பனையை தொடங்குவோம். முன்பே சுட்டால் பானையின் நிறம் மாறி பழைய பானையாகத் தெரியும் என்பதால் மண்பானை செய்யும்போதே சுடுவதில்லை.

மண்பாண்ட தொழிலாளர்களின் வீடுகளில் 90 சதவீதம் குடிசை களாகவே உள்ளன. புயலால் இப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளும் சேதம் அடைந்தன. இதனால், வீடுகளுக்குள் இருந்த மண் பாண்டங்களும் மழையில் நனைந்தும் கரைந்தும் சேத மடைந்துவிட்டன. மேலும், சுட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பானை களும் உடைந்து சேதமடைந்துள் ளன. சுமார் ஒரு லட்சம் மண் பாண்டங்கள் சேதமடைந்திருக்கும் என கருதுகிறோம். இனிமேல், புதிய மண்பாண்டங்களை செய் வதற்கும் வாய்ப்பு இல்லை.

புயலால் எங்களது வாழ்வா தாரம் அழிந்துவிட்டது. தற்போது நாங்கள் உணவுக்கே சிரமப்பட்டு வருகிறோம். எனவே, அரசு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

அதே ஊரைச் சேர்ந்த எஸ்.கோவிந்தராஜ் கூறியது: பொங்கல் பண்டிகையின்போதுதான் எங்க ளுக்கு வருமானம் கிடைக்கும். அதை வைத்துதான் பிழைப்பு நடத்தி வந்தோம். தற்போது, புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் தொழி லாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 ஆயிரம் அரசு நிவாரணம் அளிக்க வேண்டும்.

மேலும், கதர் வாரியத்தில் இருந்து பெறப்பட்டுள்ள சிறு தொழில் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். வீடுகளை இழந்தோருக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். ஊர்தோறும் தொழில்கூடம் அமைக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in