

கஜா புயல் சீரமைப்பு திட்டம் தொடர்பாக நேற்று தலைமைச்செயலர் கிரிஜா வைத் தியநாதன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங் களில் வீடுகள் மற்றும் இதர கட்டமைப்புகளின் மறு கட்டமைப்பு, வேளாண், தோட்டக் கலை பயிர்கள் மற்றும் மீனவர்களுக்கான பாதிப்புகளுக்கான மறுவாழ்வுக்காக சிறப்பு திட்டம் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
இதன் அடிப்படையில், வருவாய் நிர்வாக ஆணையர் அரசுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தின்படி, கஜா புயல் மறு கட்டமைப்பு, மறுவாழ்வு மற்றும் மீட்டுருவாக்க திட்டம் (ஜிஆர்ஆர்ஆர்பி) உருவாக்கப் பட்டுள்ளது.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவை கழகத்தின் மேலாண் இயக்குநராக உள்ள டி.ஜெகந்நாதன், சென்னையில் செயல்படும் இத் திட்ட தலைமை அலவலகத்தில் திட்ட இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார். நாகை, திருவாரூர் மாவட்டத்துக்கான தலைமையகமாக உள்ள நாகை மாவட்டத்தில் கூடுதல் திட்ட இயக்குநராக, கும்பகோணம் சார் ஆட்சியர் எம்.பிரதீப்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.