அருண் ஜேட்லி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களுடன் அமைச்சர் வேலுமணி, அதிமுக எம்.பி.க்கள் சந்திப்பு: நிலுவைத் தொகை, கஜா புயல் நிவாரண நிதி வழங்க வலியுறுத்தல்

அருண் ஜேட்லி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களுடன்
அமைச்சர் வேலுமணி, அதிமுக எம்.பி.க்கள் சந்திப்பு: நிலுவைத் தொகை, கஜா புயல் நிவாரண நிதி வழங்க வலியுறுத்தல்
Updated on
1 min read

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை நிதி, கஜா புயல் நிவாரண நிதியை வழங்குமாறு மத்திய அமைச்சர்களிடம் தமிழக அமைச் சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகிறார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர்

நேற்று முன்தினம் மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத் தில் சந்தித்து, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண் டிய நிலுவைத் தொகையை வழங் கக் கோரி மனு அளித்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக் களவை துணைத் தலைவர் மு.தம்பி துரை, அதிமுக எம்.பி.க்கள் ஆர்.வைத்திலிங்கம், டாக்டர் பி.வேணுகோபால், சி.மகேந்திரன், ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.அர்ச்சுணன் ஆகியோர் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, ஊரக மேம் பாடு, பஞ்சாயத்து ராஜ், கனிமவளத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரை சந்தித்துப் பேசினர்.

‘‘கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிலத்தின் உரி மையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி 627.89 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்'' என விமானப் போக்குவரத்து துறை அமைச்சரிடம் மனு அளித்தனர்.

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம், ''14-வது நிதி ஆணைய பரிந்துரையின் அடிப் படையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 2017-18ம் ஆண்டுக்கான செயலாக்க மானி யம் ரூ. 194 கோடியே 78 லட்சம், 2018-19-ம்ஆண்டுக்கான அடிப் படை மானியம்ரூ. 1,753 கோடியே 87 லட்சத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும்'' எனக் கோரி மனு அளித்தனர்.

முன்னதாக மத்திய நிதி அமைச் சர் அருண் ஜேட்லியைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர், 14-வது நிதி ஆணைய பரிந்துரையின்படி நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 2017-18-ம் ஆண்டுக்கான செயலாக்க மானியம் ரூ. 560 கோடியே 15 லட்சம், 2018-19-ம் ஆண்டுக்கான அடிப்படை மானியம் ரூ. 3,612 கோடியே 5 லட்சம் ஆகியவற்றை உடனடியாக வழங்கக்கோரி மனு அளித்தனர்.

கஜா புயல் நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அருண் ஜேட்லியுடம் அமைச்சர் வேலுமணி, அதிமுக எம்.பி.க்கள் மனு அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in