

அதிமுகவில் முதல்வர், துணை முதல்வர் அளிக்கும் பணிகளை மேற்காள்ள துணை ஒருங்கிணைப்பாளர்கள், அமைச்சர்களை கொண்ட ஐவர் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஓபிஎஸ் - முதல்வர் பழனிசாமி இணைப்புக்குப் பின் பல்வேறு, உயர்மட்ட பொறுப்பில் இருப்பவர்கள் மாற்றப்படாவிட்டாலும், தினகரன் அணிக்கு சென்றவர்களுக்கு பதில் பல புதிய நிர்வாகிகள் தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல்கள் வரும் நிலையில், கட்சியில் புதிய குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பு:
கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களை பரிசீலித்து உரியை நடவடிக்கை எடுக்க ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங் கிணைப்பாளர் முதல்வர் கே.பழனிசாமி அளிக்கும் பணிகளை மேற்கொள்ள இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., அமைப்புச் செயலாளர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகிய 5 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
அதிமுக அமைப்பு செயலாளர்களாக இருந்த அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பேராசிரியர் க.பொன்னுசாமி, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர்.ஆர்.லட்சுமணன் எம்.பி., ஆகியோர் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, அதிமுக அமைப்பு செயலா ளராக எம்பி., ஆர்.லட்சுமணன், கொள்கை பரப்பு துணைச்செயலாளராக பேராசிரியர் க.பொன்னுசாமி, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக உள்ள பெருமாள் நகர் கே.ராஜன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். கட்சியின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு, கீழ்ப் பெண்ணாத்தூர், போளூர், செய் யார், வந்தவாசி தொகுதிகளை இணைத்து திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த மாவட்டச் செயலா ளராக தூசி.கே.மோகன் எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆரணி, செங்கம், திருவண்ணா மலை, கலசப்பாக்கம் தொகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்கு சேவூர் எஸ்.ராமச்சந்திரன் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல், கிருஷ்ணகிரி அவைத் தலைவர் கே.அசோக்குமார், மாவட்டச் செயலாளர் வி.கோவிந்தராஜ் ஆகியோர் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி தொகுதிகளை உள்ளடக்கிய கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் உருவாக்கப்பட்டு அதற்கு மாவட்ட செயலாளராக கே.அசோக்குமார் எம்.பி., யும் பர்கூர், ஒசூர், தளி தொகுதிகளை உள்ளடக்கிய கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளராக பி.பாலகிருஷ்ண ரெட்டியும் நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவராக சைலேஷ் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது