Published : 04 Dec 2018 09:04 AM
Last Updated : 04 Dec 2018 09:04 AM

பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் தன் உயிரை ஈந்து 11 குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியை சுகந்திக்கு 9-ம் ஆண்டு நினைவு அஞ்சலி: புயலில் குடிசை வீட்டையும் பெற்றோர் இழந்து நிற்கும் பரிதாபம் 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த நாகக்குடையான் கிராமத் தில் குளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில், தன் உயிரை ஈந்து 11 குழந்தைகளைக் காப்பாற்றிய ஆசிரியை சுகந்தியின் 9-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக் கப்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் நாகக்குடையான் கிரா மத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (64). இவரது மனைவி அன்னலட்சுமி(58). இவர்களின் மகள் சுகந்தி (21). ஆசிரியர் பயிற்சி படித்திருந்த இவர், தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந் தார். கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி ஒரு வேனில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் சுகந்தி பள்ளிக்குச் சென்று கொண்டி ருந்தார்.

வழியில் பனையடி கொத்தகை அருகே வேன் சென்றபோது, செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டுநர் வேனை இயக்கியதால் ஒரு வளைவில் கட்டுப்பாட்டை இழந்த வேன், அருகில் இருந்த குளத்தில் கவிழ்ந்தது.

தண்ணீரில் மூழ்கிய 11 குழந்தை களை மீட்டு கரை ஏற்றிய சுகந்தி, மற்றொரு குழந்தையை மீட்க முயன்றபோது பரிதாபமாக இறந்தார். அவருடன் 9 பள்ளி மாணவ, மாணவிகளும் உயிரிழந் தனர். தன் உயிரை ஈந்து, 11 குழந்தைகளைக் காப்பாற்றிய சுகந்தியின் 9-ம் ஆண்டு நினைவு நாளான நேற்று, நாகக்குடையான் மேலக்காடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் சுகந்தி மற்றும் 9 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சுகந்தியின் வீடும் சாய்ந்தது

11 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய சுகந்தியின் பெற்றோர் வசிக்கும் குடிசை வீடு கஜா புயலின் தாக்குதலில் சேதமடைந் துள்ளது. தங்களுக்கு இருந்த குடிசை வீட்டையும் இழந்துவிட்டு தவிக்கின்றனர் சுகந்தியின் பெற்றோர். இதுகுறித்து சுகந்தியின் தாய் அன்னலட்சுமி கூறியதாவது:

‘‘கஜா புயலில் எங்கள் குடிசை சாய்ந்துவிட்டது. சுகந்தி இறந்த போது, அப்போதைய திமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் நிதி வழங்கினர். பின்னர் முரசொலி அறக்கட்டளை மூலம் அண்ணா பதக்கமும், ரூ.25 ஆயிரமும் வழங்கி னார்கள். அந்த தொகையில் எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு தொகுப்பு வீடு கட்டத் தொடங்கி னோம். ஆனால், பணம் போதா ததால் கட்டுமான பணி இன்னும் முடிவடையவில்லை. அந்த வீட்டில் தான் தற்போது தங்கி உள்ளோம். புயலில் குடிசை வீடு சாய்ந்ததற்கு இன்னமும் நிவாரணம் வழங்க வில்லை.

அரசு வேலை வழங்க வேண்டும்

கூலி வேலை செய்துதான் பிழைத்து வருகிறோம். சுகந்தி இறந்தபோது, அவரது தம்பி ராஜ்மோகனுக்கு கருணை அடிப் படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத் தோம். ராஜ்மோகன் கடந்த 2011-ம் ஆண்டு எலெக்ட்ரிகல் அண்ட் கம்யூனிகேஷன் டிப்ளமோ படித்துவிட்டு, வேலை இல்லாமல் இருந்து வருகிறார். சுகந்தியின் 9-ம் ஆண்டு நினைவு நாளிலாவது ராஜ்மோகனுக்கு வேலைதர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். அப்போதுதான் தன் உயிரைக் கொடுத்து 11 குழந்தைகளைக் காப்பாற்றிய சுகந்தியின் ஆன்மா சாந்தியடையும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x