

கடந்த 2004 டிச.26-ம் தேதி அதிகாலை இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கடியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக் கத்தால் ஆழிப் பேரலை (சுனாமி) உருவானது. இதனால், தமிழக கடற்கரையோரத்தில் உள்ள மாவட் டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட் டதுடன் 7 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாகை மாவட்டத்தில் மட்டுமே பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்துக்கும் மேல். இந்நிலை யில், சுனாமியால் இறந்தோருக் கான 14-ம் ஆண்டு நினைவு தினம் நாகையில் நேற்று அனுசரிக்கப் பட்டது. மாவட்ட ஆட்சியர் வளாகத் தில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூ பிக்கு, அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பல்வேறு இடங்களில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. அக்க ரைப்பேட்டை, வேதராண்யம், வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங் களில் மக்களும், பல்வேறு அமைப் பினரும் இறந்தவர்களுக்கு கண் ணீர் அஞ்சலி செலுத்தினர்.