

சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 440-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2,930-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2,905-க்கு விற்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரி கள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தங்கத்தின் விலை நேற்று உயர்ந் திருந்ததால், மக்கள் கூட்டம் கணிசமாக குறைந்திருந்தது. அடுத்த சில நாட்களுக்கு தங்கத் தின் விலை உயர்வு நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.