Published : 09 Dec 2018 09:47 AM
Last Updated : 09 Dec 2018 09:47 AM

திருட்டு போனை வாங்கிய 8 பேர் கைது: செல்போன் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு

திருட்டு செல்போனை வாங்கிய தாக சென்னையில் கல்லூரி மாணவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் செல்போன் பறிக் கும் கொள்ளையர்களை கைது செய்ய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இதற்காக தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீஸார், கிழக்கு தாம்பரம் கோட்டீஸ்வரன் (25), திருவல்லிக் கேணி உசேன் (21), அதே பகுதியைச் சேர்ந்த முகமது மொய்தீன் (20), திருட்டு போனை வாங்கிய கல்லூரி மாணவர் சையது அமீர் (18) ஆகியோரை பிடித்துள் ளனர். மேலும் திருட்டு போனை வாங்கிய விருதுநகர் மாவட்டம், வீரசோழநகர் ரசீது அகமது (25), ஆலந்தூர் தட்சிணாமூர்த்தி (19), ஈக்காட்டுத்தாங்கல் அஜய் (18), அதேபகுதியைச் சேர்ந்த சசி (19) என 8 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும் போது, “சில தினங்களுக்கு முன்னர் பாண்டிபஜாரில் ஹோண்டா ஆக்டி வாவில் வந்த 2 பேர், நடந்து சென்ற வரின் செல்போனை பறித்துச் சென்றனர். திருட்டு போன போனின் ஐஎம்இஐ எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் இளைஞர் ஒருவர் பிடிபட்டார். அவர் அளித்த தகவல்படி இந்த செல்போனை விற்ற விருது நகரைச் சேர்ந்த ரசீத் அகமது (25) பிடிபட்டார். விசாரணையில் கரோக்கி பாடகரான அசன் அலி (27) செல் போனை பறித்து சென்றது தெரிய வந்தது. அவரையும், அவரது கூட்டாளியான விக்னேஷையும் தேடுகிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x