

மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகரிக்கும்போது, கூடுதலாக 2 பெட்டிகள் இணைத்து அவை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் அடுத்தகட்டமாக அண்ணாசாலை டிஎம்எஸ் - சென்ட் ரல் வழியாக - வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதிகட் டத்தை எட்டியுள்ளன. ஏற்கெ னவே, சுரங்கப் பாதையில் அமைக் கப்பட்டுள்ள ரயில் தண்டவாளத் தில் டீசல் ரயில் இன்ஜின் இயக்கி ஆய்வு நடத்தப்பட்டது. இன்னும் 10 நாட்களில் இந்த தடத்தில் மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை நடத்தவுள்ளோம்.
தற்போது 4 பெட்டிகள் கொண்ட ஒரு மெட்ரோ ரயில் ஒருமுறை பயணிக்கும்போது, 16 பேருந்துகள், 300 கார்கள், 600 இரு சக்கர வாகனங்களால் ஏற்படும் நெரிசல் குறைகிறது. டிஎம்எஸ் பகுதியில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையில் 9.5 கிமீ தூரம் சுரங்கப்பாதை வழியாக மெட்ரோ ரயில்சேவை தொடங்கும்போது, பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகரிக்கும்போது, கூடுதலாக 2 பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். இதற்காக ஏற்கனவே, மெட்ரோ ரயில் நிலையங்களில் போதிய அளவில் நடைமேடை உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.