Published : 02 Dec 2018 10:49 AM
Last Updated : 02 Dec 2018 10:49 AM

பாஜக, அதிமுக அரசுகளுக்கு மக்கள் மீது அக்கறையில்லை: ஜி.கே.வாசன்

பாஜக, அதிமுக அரசுகளுக்கு மக்கள் மீது அக்கறையில்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

கட்சியின் 5-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அரியலூரில் நேற்று நடை பெற்றது. இதில் ஜி.கே.வாசன் பேசியது:

புயல் நிவாரணமாக தற்போது அறிவித் துள்ளதைவிட கூடுதலாக நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். மேகேதாட்டு அணை கட்டுவதில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு மறைமுகமாக ஆதரவு தருவதாக தெரிகிறது. இதைக் கண்டித்து டிச.8-ம் தேதி கிருஷ்ணகிரியில் தமாகா சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் தமிழக அரசு மாற்று நிலைப்பாட்டை எடுக் கக்கூடாது. மக்களின் எதிர்ப்பை மீறி எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வர தமிழக அரசு அனுமதிக்கூடாது. விவசாயி கள், மீனவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர் கள் என அனைத்துத் தரப்பினரின் கோரிக் கைகளையும் தமிழக அரசு ஏற்க மறுக்கிறது.

ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாகக் கூறிய மோடி, இதுவரை அதை நிறைவேற்றவில்லை. கருப்புப் பணத்தை மீட்கவில்லை. பாஜக, அதிமுக அரசுகளுக்கு மக்களின் மீது அக்கறையில்லை.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 3 தலை முறைக்கு சொந்தமானது. மக்கள் பலத்தை மட்டுமே நம்பி இயங்குகிறது. தேர்தல் நேரத் தில் ஒருமித்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமைக்கும். இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில், அரியலூர் மாவட்ட தமாகா சார்பில் ஜி.கே.வாசனுக்கு வீரவாள் வழங்கப் பட்டது. புயல் நிவாரணமாக மாவட்ட தமாகா சார்பில் ரூ.1லட்சம் காசோலை வாசனிடம் வழங்கப்பட்டது.

பொதுக்கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் ஞானதேசிகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆர்.மூப்பனார், சுரேஷ் மூப்பனார், மாநில பொதுச் செயலாளர் கோவை தங்கம், நிர்வாகிகள் என்.எஸ்.வி. சித்தன், விடியல் சேகர், மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜா உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பேசினர்.

தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக் கான தொண்டர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x