

சென்னையில் கொள்ளை சம்பவங் களில் ஈடுபட்ட 4 கொள்ளையர்கள் தெலங்கானாவில் கைது செய்யப் பட்டனர். அவர்கள் கூகுள் மேப் உதவியுடன் வசதி படைத்தவர் கள் வசிக்கும் வீடுகளை தெரிந்து கொண்டு கைவரிசை காட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் பிரபலமான தனியார் மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரின் வீட்டில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டன. அதேபோல் தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட் டம் ஆகிய பகுதிகளில் உள்ள வசதிபடைத்தோரின் வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங் கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து கொள்ளையர்களை கைது செய்ய தனிப்படை அமைக் கப்பட்டது.
இந்நிலையில் தெலங்கானா வில் கொள்ளையில் ஈடுபட்ட தாக 4 பேரை அம்மாநில போலீ ஸார் கைது செய்தனர். அவர்களி டம் நடத்தப்பட்ட விசாரணையில் தாங்கள் சென்னையிலும் கொள்ளை அடித்துள்ளதாக அவர் கள் வாக்குமூலம் அளித்தனர். இதைத் தொடர்ந்து தெலங்கானா போலீஸார், சம்பந்தப்பட்ட கொள்ளையர்களான கர்ரி சதீஸ் ரெட்டி (34), நரேந்திரா (24), சிலினிவாஸ் (22), சுதீர் குமார் ரெட்டி ஆகிய 4 பேரை சென்னை போலீஸாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக அவர்களிடம் நடத் திய விசாரணையில் சென்னையில் வசதி படைத்தோர் வசிக்கும் வீடுகளை கூகுள் மேப் உதவியுடன் தெரிந்து கொண்டதாகவும், அதைத் தொடர்ந்து அந்த பகுதி களில் பகலில் ஆட்டோவில் சென்று நோட்டம் விட்டு இரவில் கைவரிசை காட்டியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தெலங்கானாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து கைவரிசை காட்டிவிட்டு ரயில் மூலம் சொந்த ஊர் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்ததாகவும் கொள்ளை யர்கள் கூறியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் நுங்கம் பாக்கம் காவல் உதவி ஆணை யர் முத்துவேல்பாண்டி தலைமை யிலான தனிப்படையினர் தெலங் கானா சென்று கொள்ளையர் களிடமிருந்து 120 சவரன் தங்க நகைகளை மீட்டுள்ளனர். அவர் களை சென்னைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.