Published : 30 Dec 2018 10:19 AM
Last Updated : 30 Dec 2018 10:19 AM

கோரிக்கையை ஏற்பதாக அரசு உறுதி; இடைநிலை ஆசிரியர்களின் 6 நாள் போராட்டம் வாபஸ்

ஊதிய முரண்பாடுகளை நீக்குவதற்கான ஒருநபர் குழுவின் அறிக்கை விரைவில் அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே, கோரிக்கை குறித்து நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று வாபஸ் பெற்றனர்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2 ஆயிரத்துக்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 24-ம் தேதி முதல் 6 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடல்நலக் குறை வால் பாதிக்கப்பட்ட 230-க்கும் அதிகமான ஆசிரியர்கள் ராயப் பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக ரத்த தானம் செய்யும் முயற்சியில் ஆசிரியர்கள் நேற்று இறங்கினர். ஏற்கெனவே உடல் சோர்வடைந்த நிலையில், பலரும் ரத்த தானம் அளிக்க முன்வந்ததால், அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. ரத்த தானம் செய்ய போலீஸார் அனுமதி மறுத்ததால், இரு தரப்பின ருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

செய்தியாளர்களிடம் இடை நிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்க பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது:

பொதுமக்கள் உட்பட யாருக் கும் சிறு பாதிப்புகூட ஏற்படாத வகையில், கடந்த ஒரு வாரமாக அறவழியில் போராடினோம். எங்களது நியாயமான கோரிக் கையை நிறைவேற்றித் தருவதாக அரசு அளித்துள்ள உத்தரவாதத்தை நம்பி இந்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். உறுதி கூறியபடி அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், மீண்டும் எங்களை போராட்டத்துக்கு தள்ளாது என்றும் நம்புகிறோம்.விடுமுறை முடிந்து, ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில். மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டும் எங்களின் போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x