

பொங்கல் பண்டிகையை முன் னிட்டு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 14 ஆயிரத்து 263 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை யொட்டி சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து மொத்தம் 14 ஆயிரத்து 263 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கடந்த ஆண்டில் பொங்கல் பண்டிகையின்போது, மொத்தம் 4 லட்சத்து 92 ஆயிரத்து 20 பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். இதில், 2 லட்சத்து 4 ஆயிரத்து 275 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். தொழிற்சங்கங்களின் வேலைநிறுத் தம் போன்ற காரணங்களால் பயணிகளின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தது.
6 லட்சம் பயணிகள்
இந்த ஆண்டில் அரசு பேருந்து களில் பயணிகளின் எண்ணிக்கை 6 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இதற்கான முன் னேற்பாடுகளை செய்து வருகி றோம். அதேபோல், பொங்கல் பண் டிகை முடிந்து திரும்புவதற்கும் போதிய அளவில் சிறப்பு பேருந் துகளை விட ஏற்பாடுகள் செய்துள்ளோம். வரும் 2-ம் தேதி மற்றொரு ஆய்வு கூட்டம் இருக்கிறது. அதில், முழுமையான அறிவிப்பு வெளியிடப்படும். வரும் 9-ம் தேதி டிக்கெட் முன்பதிவுக்கான சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்படும்.
ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படும். ஓசூர், கிருஷ்ணகிரி மார்க்கமாகச் செல்லும் பேருந்து கள், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும், சிதம்பரம், கும்பகோணம் போன்ற கிழக்கு கடற்கரை வழியாக செல்லும் பேருந் துகள் சானடோரியம் பேருந்து நிலை யத்தில் இருந்தும் இயக்கப்படும். திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். கணிச மான பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். கோயம் பேட்டில் இருந்து சேலம், மதுரை, கோவை போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப் படும். குறைந்த கட்டணத்தில் அதிக அளவில் அரசு பேருந்துகளை இயக்குகிறோம்.
மக்கள் ஆம்னி பேருந்து கட்டண உயர்வுகளில் சிக்காமல் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய முன்வர வேண்டும். அதே நேரத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.