Published : 09 Dec 2018 09:52 am

Updated : 09 Dec 2018 09:52 am

 

Published : 09 Dec 2018 09:52 AM
Last Updated : 09 Dec 2018 09:52 AM

136-வது பிறந்தநாள் விழா தொடக்கம்; பாரதி போல சுயநலமின்றி சேவை செய்ய வேண்டும்: இளைஞர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் வேண்டுகோள்

136

பாரதியாரைப் போல, சுயநலமின்றி நாட்டின் பெருமைகளை பறைசாற் றவும், நாட்டுக்கு சேவை செய்ய வும் அதிக இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் கூறினார்.

பாரதியாரின் 136-வது பிறந்த நாள் வரும் 11-ம் தேதி கொண்டாடப் படுகிறது. இதையொட்டி, வானவில் பண்பாட்டு மையம், தமிழக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ‘பாரதி திருவிழா’, ‘தேச பக்திப் பெருவிழா’ என்ற 4 நாள் விழா கொண்டாடப் படுகிறது. இதன் தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, விழாவை தொடங்கிவைத்தார். கலைச்சுவை மிக்க பல திரைப்படங்களை தந்த மூத்த இயக்குநர் கே.விஸ்வநாத் துக்கு ‘பாரதி விருது’ வழங்கி னார். ‘வீர சுதந்திரம்’ என்ற கலைக் காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:

கவிஞர், அறிஞர், பெண் உரிமை போராளி, பன்மொழிப் புலவர் என்று பன்முகத்தன்மை பெற்று விளங்கியவர் பாரதியார். அவரது கவிதைகள் முற்போக்கான சீர் திருத்த லட்சியங்கள், கருத்து களைக் கொண்டவை. தனது வீரமிக்க வரிகள் மூலம் நவீன தமிழ் கவிஞர்களுக்கும் அவர் முன்னோடியாக திகழ்கிறார். பாரதிபோல, சுயநலமின்றி நாட்டின் பெருமைகளை பறைசாற்றவும், சேவை செய்யவும் இளைஞர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அமைச்சர்கள் பேசியதாவது:

செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு: பாரதியின் 100-வது பிறந்தநாள் விழா எட்டயபுரத்தில் நடந்தது. அதில் கலந்துகொள்ள, பாரதி கண்ட புதுமைப் பெண்ணான ஜெயலலிதா வந்திருந்தார். அது தான் அவர் கலந்துகொண்ட முதல் பொது நிகழ்ச்சி.

இந்திய தேசத்தின் புதுமைப் பெண் எப்படி இருக்க வேண்டும் என் பதற்கு இலக்கணம் அமைத்தவர் பாரதி. அதற்கு இம்மியளவும் பிசகாமல் வாழ்ந்துகாட்டினார் ஜெயலலிதா.

பெண்கள் முன்னேற்றத்துக் காக பல நலத்திட்டங்களை வழங்கி பாரதியின் கனவை நிறைவேற்றினார்.

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் வந்தாலும் பாரதியின் புகழ் மங்காது. மீண்டும் மலர்ந்து கொண்டே இருக்கும். அவர் மீது மரியாதை கொண்டுள்ள தமிழக அரசு, அவருக்கு பல்வேறு வகை களில் சிறப்பு சேர்த்து வருகிறது.

தமிழ் வளர்ச்சித் துறை அமைச் சர் க.பாண்டியராஜன்: பாரதியின் தலைசிறந்த படைப்புகளை அரபு, சீன மொழியிலும் ஜெயலலிதா மொழிபெயர்க்கச் செய்தார். அவ ரது படைப்புகள் 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

திருக்குறள் இருக்கக்கூடிய எல்லா மொழிகளிலும் பாரதியை கொண்டு சேர்க்கும் புனிதப் பணியை உலக தமிழாராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தும். பாரதியை ஒவ்வொரு இளைஞர் கள், பள்ளி, கல்லூரி மாணவர் களிடமும் கொண்டுசேர்க்க சிறப்பு திட்டத்தை தமிழக அரசு செயல் படுத்தும். ‘திருக்குறள் முற்றோதல்’ போல, பாரதிக்கும் சிறப்பு செய்யும் புனிதப் பயணத்தை தமிழ் வளர்ச்சித் துறை இந்த ஆண்டு தொடங்கிவைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிகழ்ச்சியில் வானவில் பண் பாட்டு மைய நிறுவனர் கே.ரவி, மையத்தின் புரவலரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணே சன், மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, திரைப்பட இயக்குநர்கள் எஸ்பி. முத்துராமன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பள்ளி மாணவ, மாணவி கள் கலந்துகொண்டனர்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரை, மாறுவேடம் உட் பட பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டன. ஏராளமான மாணவர்கள் பாரதியார் போல வேடமணிந்து வந்திருந்தனர்.

இன்று 2-வது நாள் நிகழ்ச்சியும் கலைவாணர் அரங்கில் நடக்கிறது. 10, 11 தேதிகளில் திருவல்லிக்கேணி யில் உள்ள பாரதியார் இல்லத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. முக்கிய நிகழ்வான பாரதியின் ‘ஜதி பல்லக்கு’ 11-ல் நடக்கிறது.

செய்தியாளர்களிடம் அமைச் சர் க.பாண்டியராஜன் கூறும்போது, ‘‘ஆங்கிலத்தில் இருக்கும் ஊர் பெயர்களை தமிழில் மாற்று வது குறித்து ஆட்சியர் அளவில் ஆலோசனை நடத்தி, அப்பெயர் களை தேர்வு செய்து அனுப்பியுள் ளனர். ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழில் மாற்றம் செய்வதற்கான ஆணை 2 வாரத்தில் பிறப்பிக்கப்படும். அப்போது ‘டிரிப்ளிகேன்’ என்பது திருவல்லிக்கேணியாகவும், ‘டூட்டிகோரின்’ என்பது தூத்துக்குடி யாகவும் உருமாறும். தமிழகத்தில் ஆங்கிலத்தில் இருக்கும் 3,000 ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்ற ப்பட உள்ளன” என்றார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x