Published : 26 Dec 2018 09:39 AM
Last Updated : 26 Dec 2018 09:39 AM

உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.மணி காலமானார்

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.மணி(88) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.

தென்காசியில் 1930-ல் வழக்கறி ஞர் டி.எஸ்.ராமநாத ஐயரின் மூத்த மகனாக பிறந்தார் டி.ஆர்.மணி. சென்னை சட்ட கல்லூரியில் பயின்று, 1955-ல் வழக்கறிஞரா னார். பதிவு செய்த ஓராண்டிலேயே 3 நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வில் வாதிட்டார்.

சிவில் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர். நீதிமன்ற கட்டண மறு ஆய்வுக் குழுவில், மூத்த வழக் கறிஞராக உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். மறைந்த நீதிபதி கே.சம்பத், நீதிபதி வெ.ராமசுப்பிர மணியன், நீதிபதி ஆர்.எஸ்.ராம நாதன், நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் இவரது ஜூனியர்கள் ஆவர்.

கடந்த ஒரு மாதமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டி.ஆர்.மணி, நேற்று மறைந்தார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மயிலாப்பூர் டாக்டர் ரங்காச்சாரி சாலையில் உள்ள வீட் டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் அஞ் சலி செலுத்தினர். பெசன்ட் நகர் மின்மயானத்தில் நாளை (டிச.27) பகல் 12 மணிக்கு இறுதி சடங்குகள் நடக்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x