ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி - எஃப் 11 ராக்கெட் மூலம் ஜிசாட் - 7ஏ நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது: ராணுவ பயன்பாட்டுக்கான செயற்கைக் கோள்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி - எஃப் 11 ராக்கெட் மூலம் ஜிசாட் - 7ஏ நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது: ராணுவ பயன்பாட்டுக்கான செயற்கைக் கோள்
Updated on
1 min read

ராணுவப் பயன்பாட்டுக்கான ஜிசாட்-7ஏ செயற்கைக் கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி - எஃப்11 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), அதிநவீன செயற்கைக் கோள்கள், அவற்றை விண்ணில் செலுத்துவதற்கான பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்களை வடிவமைத்து தயாரித்து வருகிறது. இதற்கான மென்பொருள் தொழில்நுட்பங்கள் இந்தியாவிலேயே உருவாக்கப் படுகின்றன.

இந்த நிலையில், இந்திய எல்லைப் பகுதியில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத் துவது உட்பட முழுக்க ராணுவ பயன்பாட்டுக்காக ‘ஜிசாட்-7ஏ’ என்ற அதிநவீன செயற்கைக் கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி - எஃப்11 ராக்கெட் மூலம் ஜிசாட்-7ஏ செயற்கைக் கோள் 19-ம் தேதி (நாளை) மாலை 4.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்டப் பணிகள் தற் போது மும்முரமாக நடந்து வருகின்றன.

‘ஜிசாட் - 7ஏ’ செயற்கைக் கோள் 2,225 கிலோ எடை கொண்டது. புவி சுற்றுவட்டப் பாதையில் 40,900 கி.மீ. தூரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இது ஜிசாட் வரிசையில் 35-வது செயற்கைக் கோள் ஆகும். இதை விண்ணில் செலுத்தும் ராக்கெட், ஜிஎஸ்எல்வி வரிசையில் 13-வது ராக்கெட் ஆகும்.

இந்த செயற்கைக் கோள் வாயிலாக, போர்க் காலங்களில் விமானங்களின் இருப்பிடத்தை துல்லியமாக அறிய முடியும். செயற்கைக் கோளின் தகவல் தொடர்பு சேவை, வான்வெளி தாக்குதலுக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

மேலும் ஆளில்லா குட்டி விமானங்கள் (டிரோன்) மூலம் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும் பயன்படும். இதன் ஆயுட்காலம் 8 ஆண் டுகள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in