வட கடலோர தமிழகத்தில் சில தினங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

வட கடலோர தமிழகத்தில் சில தினங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
1 min read

வட கடலோர தமிழகத்தில் வரும் 4, 5 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கள் கூறியிருப்பதாவது:

மேற்கு மத்திய வங்கக் கடலில், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் தாக்கத்தால் அடுத்த சில தினங் களுக்கு கிழக்கு திசைக் காற்று தமிழகம் நோக்கி பலமாக வீச வாய்ப்புள்ளது. அதன் காரணமாக 3-ம் தேதி வாக்கில், கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாகவும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.

4-ம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களிலும், 5-ம் தேதி பரவலாகவும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 4 மற்றும் 5-ம் தேதிகளில் வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசம், அம்பாசமுத்திரம் ஆகிய இடங் களில் தலா 4 செமீ, நீலகிரி மாவட்டம் குன்னூர், நெல்லை மாவட்டம் ஆய்க்குடி, தென்காசி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in