

வரும், 4-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை மைய ஆய்வு இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்ததாவது:
வருகிற 4, 5, 6 ஆகிய தேதிகளில் வட தமிழகம், புதுவை கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் மிதமான மழையும் பெய்யும். சென்னையைப் பொருத்தவரை இன்றும் நாளையும் (2ம் தேதி 3ம் தேதி) சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம்.
மேலும் 4 மற்றும் 5ம் தேதிகளிலும் மிதமான மழைக்கு சில இடங்களில் வாய்ப்பு உண்டு.
4ம் தேதி முதல் 6ம் தேதி வரை கடலோர மாவட்டங்களிலும் உள்மாவட்டங்களிலும் மழை உண்டு. உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை.
இவ்வாறு பாலசந்திரன் தெரிவித்தார்.