Published : 12 Dec 2018 09:44 AM
Last Updated : 12 Dec 2018 09:44 AM

நகர்ப்புற பிரதான மின் தடங்களை தரை வழி கேபிள்களாக மாற்ற நடவடிக்கை: எரிசக்தித் துறை செயலர் தகவல்

தமிழகத்தில் நகர்ப்புறங்களில் உள்ள பிரதான மின் தடங்களை, தரைவழி கேபிள்களாக மாற்று வதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு தொடங்கியுள்ளதாக எரிசக்தித் துறை செயலர் நசிமுத்தீன் தெரிவித்தார்.

இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு (பிக்கி) மற்றும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) ஆகியவை சார்பில் எரிசக்தி தொடர்பான ஒருநாள் மாநாடு  சென்னையில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டை தொடங்கிவைத்து  எரிசக்தித் துறை செயலாளர் முகமது நசிமுத்தின் பேசியதாவது:

தமிழகத்தில் கஜா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்ல 10 அல்லது 15 நிமிடங்கள்தான் ஆகும். ஆனால், புயல் நிவாரணப்பணிக்கு சென்ற போது இரண்டரை மணி நேரம் ஆனது.  தெருவிளக்குகளே இல்லை. அங்கு இப்போது மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 2 லட்சத்து 25 ஆயிரம் மின்கம்பங்கள், 200-க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்கள் சீரமைக்கப்பட்டுள் ளன. இன்னும் வயல்வெளிகளில் விழுந்து கிடக்கும் மின்கம்பங் களைக்  கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த புயலில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு, வரும் காலங்களி்ல் அதற்கேற்ற வகை

யில் முன்னேற்பாடுடன் தயாராக வேண்டியுள்ளது. மின்கம்பங்கள்   மிகவும் ஆழமாகவும், கான்கிரீட் கொண்டும் நடப்பட வேண்டும் என்று  முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர  நகர்ப்புறங்களில் மின் கம்பங்களுக்கு பதில் தரைவழி கேபிள்கள் அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் கே.பழனி

சாமி, மத்திய அரசிடம் நிதி கோரியுள்ளார். புயல் பாதித்த பகுதிகளில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர் கள் தற்போதும் பணியாற்றி வருகின்றனர்.

எரிசக்தி ஆதாரங்கள்

பொதுவாக எரிசக்தித் துறை யில் மிகப்பெரும் மாற்றம் எற்படும் போது அதைப்பற்றிய பேச்சுக்கள் அதிக அளவில் எழும். தற்போது, நாம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி காலத்தில் உள்ளோம். வருங் காலங்களில் 80 முதல் 90 சதவீதம் எரிசக்தி இவற்றில் இருந்து தான் கிடைக்கும். அதே நேரம், மற்ற எரிசக்தி உற்பத்திக்கான ஆதாரங்கள் இல்லாமல் போய் விடும். நாம் தற்போது 4 புதுப்பிக் கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் குறித்தே பேசி வருகிறோம். மேலும், 7-க்கும் மேற்பட்ட ஆதா ரங்கள் இருக்கின்றன. அவை தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டில், ஆஸ்தி ரேலிய துணை தூதர் மைக்கேல் கோஸ்டா, பிக்கி அமைப்பின் எரிசக்தி பிரிவு தலைவர் எம்.நந்தகுமார், பிக்கி தலைவர் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x