Last Updated : 21 Dec, 2018 11:42 AM

 

Published : 21 Dec 2018 11:42 AM
Last Updated : 21 Dec 2018 11:42 AM

சென்னையில் ஆய்வு செய்யப்பட்டஉணவுப் பொருட்களில் ஆன்ட்டி பயாட்டிக்கையே தடுக்கும் வீரியமிக்க பாக்டீரியா கண்டுபிடிப்பு

சென்னையில் கடந்த 2017-ம் ஆண்டு ஆய்வுக்கு எடுக்கப்பட்ட பல்வேறு உணவுப் பொருட்களில் ஆன்ட்டி பயாட்டிக்கின் ராஜா என்று அழைக்கப்படும் கோலிஸ்டினையே எதிர்க்கும் பாக்டீரியாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை, அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை மற்றும் வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் இணைந்து கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே ஆய்வு நடத்தினார்கள். அதில் சென்னையில் 22 இடங்களில் கடைகள், வீடுகள் ஆகியவற்றில் இருந்து பல்வேறுவிதமான உணவுப்பொருட்கள் மாதிரி சேகரிக்கப்பட்டன. இந்த உணவுப் பொருட்களை ஆய்வு செய்ததில் 46.4 சதவீதம் அதிகசக்தி வாய்ந்த கோலிஸ்டின் என்ற ஆன்டிபயாட்டிக் மருந்தை எதிர்க்கும் திறன் கொண்ட பாக்டீரியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆய்வு குறித்த கட்டுரை ‘ஜர்னல் ஆப் குளோபல் ஆன்ட்டிமைக்ரோபியல் ரெஸிஸ்டன்ட்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

கோலிஸ்டின் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து(ஆன்ட்டி பயாட்டிக்) என்பது, வாழ்வின் கடைசிக்காலகட்டத்தில் உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு எந்தவிதமான ஆன்டிபயாட்டிக் கொடுத்தாலும் வேலை செய்யவில்லை என்ற கட்டத்தில் இந்த கோலிஸ்டின் ஆன்ட்டி பயாடிக் மருந்தை மருத்துவர்கள் உடலில் செலுத்தி உயிர்பிழைக்க வைப்பார்கள். மருத்துவ உலகில் புனிதநீர் என்று கோலிஸ்டின் ஆன்டிபயாட்டிக்கை அழைப்பார்கள்.

பெரும்பாலான மனிதர்களுக்கு கோலிஸ்டின் மருந்து உடலில் செலுத்தினால் ஏற்றுக்கொள்ளும். ஒரு சிலருக்கு மட்டுமே ஒவ்வாமை ஏற்படும். ஆனால், கோலிஸ்டின் மருந்து மனிதர்களுக்குச் செலுத்தப்பட்டால், விரைவில் சிறுநீரகம் செயல் இழந்துவிடும் என்பதால், மருத்துவர்கள் இதை மனிதர்களுக்குப் பரிந்துரைப்பதை, பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர்.

ஆனால், அனைத்துப் பாக்டீரியாக்களையும் எதிர்க்கும் வல்லமை கொண்ட இந்த கோலிஸ்டின் ஆன்டிபயாடிக் மருந்தையே எதிர்க்கும் பாக்டீரியார்கள் சென்னையில் ஆய்வுக்கு எடுக்கப்பட்ட உணவுப்பொருட்களில் கலந்திருந்ததுதான் அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.

அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் கட்டுரையாளர் அப்துல் கபார் கூறுகையில், “ மருத்துவ சிகிச்சை நடைமுறையில்  கோலிஸ்டின் ஆன்ட்டி பயாட்டிக் மருந்து என்பது புனித நீர் என்று அழைக்கப்படும். நோய்வாய்ப்பட்டு, உயிருக்குப் போராடும் நோயாளிகளை உயிர்பிழைக்க வைக்கக் கொடுக்கப்படும் உயர்பட்ச ஆன்ட்டிபயாடிக் மருந்தாகும். மருத்துவ சிகிச்சை முறைகளில் கொலிஸ்டினைத் தடுக்கும் பாக்டீரியாக்கள் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது உணவுகளிலும் கோலிஸ்டின் உணவுப் பொருட்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

உணவுப்பொருட்கள், உணவுச்சங்கிலி வழியாக கோலிஸ்டினை தடுக்கும், எதிர்க்கும் பாக்டீரியாக்கள் வளரும் விதம் குறித்து பல்வேறு கட்டுரைகள் உலக அளவில் வெளியாகியுள்ளன. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், நாங்கள் மாதிரிக்கு எடுத்த உணவுப்பொருட்களில் கோலிஸ்டின் ஆன்டிபயாடிக்கை எதிர்க்கும் வீரியம் மிகுந்த பாக்டீரியா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

கோலிஸ்டின் ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் பெரும்பாலும் கோழிப்பண்ணைகளில் ப யன்படுத்தப்படுகிறது. அந்த கோழிப்பண்ணைக் கழிவுகள் உரமாக விளைநிலங்களில் பயன்படுத்தப்படுகிறது.

கெட்டுப்போன உணவுப்பொருட்களை நாம் ஒவ்வொரு நாளும் சாப்பிடும்போது, ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை எதிர்க்கும் பாக்டீரியாக்கள் வளருவதை நாம் அனுமதிக்கிறோம், குறிப்பாக நாம் கோலிஸ்டின் ஆன்ட்டிபயாடிக் மருந்தை எதிர்த்தும் வீரியம் கொண்ட பாக்டீரியா வளருவதை ஊக்குவிக்கிறோம்.

உணவுப்பொருட்கள் சமைக்கப்படும் போது பாக்டீரியாக்கள் கொல்லப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், உணவுப்பொருட்கள் கெட்டுப்போய் சமையல் அறையில் இருக்கும்போது, மக்கள் அதைக் கையாளும்போது அது வெளிப்படும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x