

லட்சத்தீவு அருகே நிலவும் காற்ற ழுத்த தாழ்வுநிலை காரணமாக தென் தமிழகத்தில் இன்று பரவ லாக மழை பெய்ய வாய்ப் புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கள் கூறியதாவது:
நேற்று முன்தினம் குமரிக் கடல் மற்றும் வடக்கு கேரள கரை வரை நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தற்போது லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதியில் நிலவி வருகிறது. அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதி யில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாகவே நீடித்து வருகிறது. இது மேலும் வலுப்பெற வாய்ப்பில்லை.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடலில் நிலநடுக்கோட்டு பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருகிறது. இது மேலும் வலுப்பெற்று அதே பகுதியில் வரும் 9-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.