

திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை பகுதியில் அலையாத்திக் காடுகள் உள்ளன. கோடியக்கரை தொடங்கி முத்துப்பேட்டை, அதி ராம்பட்டினம் வரை சுமார் 11,000 ஹெக்டேர் பரப்பளவில் இந்த அலையாத்திக் காடுகள் அமைந் துள்ளன. கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி தாக்கியபோது, ஆழிப் பேரலைகள் இப்பகுதிக்குள் நுழை யாமல் தடுக்கப்பட்டதற்கு இந்த அலையாத்திக் காடுகள்தான் காரணம்.
இதையறிந்த மத்திய அரசு, கூடு தல் நிதி வழங்கி முத்துப்பேட்டை பகுதியில் அலையாத்தி மரங்களை அதிக அளவில் வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், சுனாமியை எதிர்கொண்ட அலையாத்திக் காடு, கடந்த 16-ம் தேதி கரைகடந்த புயலை தாக்குப்பிடிக்க முடியாமல் நிலைகுலைந்து காணப்படுகிறது.
இங்குள்ள தில்லை, சுரப் புன்னை, அலையாத்தி உள்ளிட்ட மரங்களின் கிளைகள் காற்றின் வேகத்தில் உடைத்தெறியப்பட்டன. புயல் தாக்கி, 12 நாட்கள் ஆகிவிட்டநிலையில், கிளைகள் உடைந்துபோன மரங்கள் காய்ந்த விறகுகளாகக் காட்சியளிக் கின்றன.
முத்துப்பேட்டை அலையாத்திக் காடு பகுதி சுற்றுலாத்தலமாக அறி விக்கப்பட்ட பின்னர், வனத்துறை மூலம் அமைக்கப்பட்ட மர நடைப் பாலங்கள், கண்காணிப்பு கோபு ரங்கள், ஓய்வு எடுப்பதற்கான கூடா ரங்கள் அனைத்தும் சேதமடைந் துள்ளன. வழக்கமாக பறந்து திரியும் பறவைகளையும் காண முடிய வில்லை.
இதுகுறித்து சமூக ஆர்வலர் டாக்டர் அபுதாகிர் கூறியபோது, "புய லில் முத்துப்பேட்டை நகரத்துக்கு வந்த பேராபத்தை பெருமளவு இக் காடுகளே உள்வாங்கி கொண்ட தாகத் தெரிகிறது. அலையாத்தி மரங்கள் வேரோடு சாய்ந்து விட்ட தால் மரங்கள் காய்ந்துவிட்டன. அஜாக்கிரதையால் தீப்பற்றி விடாமல் தடுக்க, மரங்கள் நன்கு துளிர்க்கும் வரை சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்காமல் இருப்பது நல்லது" என்றார்.
சூழலியல் ஆர்வலர் முகமது மாலிக் கூறியபோது, "அலையாத்தி மரங்கள், சுரபுன்னை உட்பட 13 வகை மரங்கள் இக்காட்டில் உள் ளன. குறிப்பாக அலையாத்தி, சுரபுன்னை மரங்கள் ஆகாயத்தில் விதை முளைவிடும் ரகத்தைச் சேர்ந்தவை. அக்டோபர் மாதத்தில் காய்த்து நவம்பர் மாதத்தில் விதை கள் தண்ணீரில் விழும், அவை நீரோட்டத்தில் சதுப்பு நிலம் நோக்கி நகர்ந்து சென்று முளைக்கத் தொடங்கும். தற்போது மரங்கள் விழுந்துவிட்டதால் உடனடியாக வனத்துறையினர் சூழலியல் ஆய்வாளர்களுடன் சேர்ந்து விதை களைச் சேகரித்து அவற்றை மீண்டும் விதைக்கும் பணியைச் செய்ய வேண்டும்" என்றார்.
மீனவர் சங்கத் தலைவர் மீரா மைதீன் கூறியபோது, "அலையாத் திக் காடு, புயலுக்குப்பிறகு பெரிய சீரழிவைச் சந்தித்துள்ளது. கடலுக் குள் சென்று வரும் மீனவர்களுக்கு கரை திரும்ப அடையாளங்கள் தெரியவில்லை" என்றார்.