அறிவியல், தொழில்நுட்பத் துறையில் சிறந்த பங்களிப்பு: 29 அறிவியலாளர்களுக்கு விருது - முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்

அறிவியல், தொழில்நுட்பத் துறையில் சிறந்த பங்களிப்பு: 29 அறிவியலாளர்களுக்கு விருது - முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்
Updated on
2 min read

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்த பங்களிப்புக்காக 29 அறிவியலாளர்களுக்கு தமிழ் நாடு மாநில அறிவியல் தொழில் நுட்ப கவுன்சில் விருதுகளை முதல்வர் கே.பழனிசாமி நேற்று வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பங் களிப்பு செய்யும் அறிவியலாளர் களை கவுரவிக்கும் வகையில் வேளாண்மை, உயிரியல், வேதியி யல், சுற்றுச்சூழலியல், பொறியியல் தொழில்நுட்பம், கணக்கியல், மருத்துவம், இயற்பியல், கால்நடை அறிவியல், சமூகவியல் ஆகிய 10 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங் கப்பட்டு வருகின்றன. இவ்விருது களை தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் வழங்கு கிறது.

தமிழகத்தில் உள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைவர்களிடமிருந்து முன்மொழி வுகள் பெறப்பட்டு, தமிழக அறி வியல் அறிஞர் விருது தேர்வு குழுவால் ஒவ்வொரு துறையிலும் பரிந்துரைகள் பெறப்பட்டு, தகுதி வாய்ந்த அறிவியல் அறிஞர்கள் விருதுக்கு தேர்வுசெய்யப்படு கிறார்கள்.

அந்த வகையில், 2015-ஆம் ஆண்டுக்கான தமிழக அறிவியல் அறிஞர் விருதுக்கு எஸ். வின் சென்ட் (உயிரியல்), என்.முருகன் (வேதியியல்), ஆர். ராஜேந்திரன் (சுற்றுச்சூழல் அறிவியல்), ஜி. வைஸ்லின் ஜிஜி (பொறியியல் தொழில்நுட்பவியல்), வி. ரேணுகா தேவி (கணிதவியல்), மருத்துவர் கள் எஸ். குமரவேல், கே. நாராயணசாமி (மருத்துவயியல்), ஆர். சத்தியமூர்த்தி (இயற்பியல்), எம். செல்வம் (சமூகவியல்), ஏ.வி. ஓம்பிரகாஷ் (கால்நடையியல்) ஆகியோரும்,

2016-ஆம் ஆண்டுக்கான தமிழக அறிவியலறிஞர் விருதுக்கு எஸ். நக்கீரன் (வேளாண்மை), என். மதி வாணன் (உயிரியல்), ஆர். ரமேஷ் (வேதியியல்), எஸ். அன்பழகன் (சுற்றுச்சூழல் அறிவியல்), எஸ். கண்மணி (பொறியியல் தொழில் நுட்பவியல்), ஆர். உதயகுமார் (கணிதவியல்), எஸ். வெற்றிவேல் செழியன் (மருத்துவவியல்), ஆர். ஜெயவேல் (இயற்பியல்), ஜி. ஜெயசேகரன் (கால்நடையியல்) ஆகியோரும்,

2017-ஆம் ஆண்டுக்கான தமிழக அறிவியலறிஞர் விருதுக்கு எம். ரவீந்திரன் (வேளாண்மை), எம். மைக்கேல் கிரோமிகா (உயிரியல்), எஸ். கருப்புச்சாமி (வேதியியல்), எஸ். வாசுதேவன் (சுற்றுச்சூழல் அறிவியல்), பி. சிவகுமார் (பொறி யியல் தொழில்நுட்பவியல்), என். அன்பழகன் (கணிதவியல்), ஆர். லட்சுமி நரசிம்மன் (மருத்து வவியல்), கே. ஜெகந்நாதன் (இயற் பியல்), எஸ்.கவுசல்யா (சமூக வியல்), ஏ.கே. திருவேங்கடன் (கால்நடையியல்) ஆகியோரும் தேர்வுசெய்யப்பட்டிருந்தனர்.

மேற்குறிப்பிட்ட 29 அறிவிய லாளர்களுக்கு, தமிழக அறிவிய லறிஞர் விருதுகளையும், தலா ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையையும், பட்டயங்கள் மற்றும் சான்றிதழ் களையும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமி நேற்று வழங்கினார். அப்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர்-செயலர் சீனிவாசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in