

வங்கிகள் இணைப்பைக் கண்டித் தும் வாராக் கடன்களை வசூலிக்கக் கோரியும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்க டாச்சலம் கூறியதாவது:
தேனா வங்கி, விஜயா வங்கி, பேங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், வங்கி ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வங்கிகளை இணைக்கக் கூடாது என அகில இந்திய வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் உள் ளிட்ட 9 சங்கங்கள் அடங்கிய வங்கி சங்கங்களின் ஐக்கிய முன் னணி தொடர்ந்து எதிர்க்கிறது.
இதுதொடர்பாக வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியதையடுத்து, மத்திய தொழிலாளர் நலத்துறை பேச்சு நடத்தியது. இதில், வங்கிகள் இணைப்பை கைவிடுவது குறித்து அரசு தரப்பிலும், 3 வங்கிகள் தரப்பிலும் எவ்வித உத்தரவாத மும் தரப்படவில்லை. எனவே, இக்கோரிக்கையை வலியுறுத்தி டிசம்பர் 26-ம் தேதி (நாளை) நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர் கள், அதிகாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில் தமிழகத்தில் 80 ஆயிரம் பேரும், நாடு தழுவிய அளவில் 10 லட்சம் பேரும் பங்கேற்கின்றனர். இதனால், தமிழகத்தில் 15 ஆயிரம் வங்கிக் கிளைகளும் நாடு முழுவ தும் 85 ஆயிரம் வங்கிக் கிளை களும் மூடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அகில இந்திய வங்கி அதிகாரி கள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ கூறும்போது, ‘‘ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி டிசம்பர் 21-ம் தேதி வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இந்நிலையில், 3 வங்கிகள் இணைப்பைக் கண்டித்தும், வங்கி வாராக் கடன்களை தள்ளுபடி செய் யாமல் அவற்றை வசூலிக்கக் கோரியும் டிசம்பர் 26-ம் தேதி நடக் கும் வேலைநிறுத்தப் போராட்டத் தில் பங்கேற்கின்றனர். தமிழக அள வில் 35 ஆயிரம் பேரும், நாடு முழுவதும் 4 லட்சம் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்’’ என்றார்.
இன்று கிறிஸ்துமஸை முன்னிட் டும், நாளை வேலைநிறுத்தத்தாலும் ஏடிஎம்களில் பணத் தட்டு்ப்பாடு ஏற்படும் என தெரிகிறது.