Published : 05 Dec 2018 10:05 AM
Last Updated : 05 Dec 2018 10:05 AM

வட நாட்டுத் தொழிலாளர்களால் வேலையிழக்கும் உள்ளூர் மக்கள்: பாரம் சுமக்கும் பணியாளர்கள் மனு

வட நாட்டுத் தொழிலாளர்களால் உள் ளூர் தொழிலாளர்கள் வேலையிழந்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாரம் சுமக்கும் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

கோவை மாவட்ட போக்குவரத்து லாரி பாரம் சுமக்கும் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலர் பி.ஏ.காளிமுத்து மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு: கோவை ராஜவீதி, செட்டிவீதி, அசோக் நகர், சொக்கம்புதூர், பனைமரத்தூர், கருப்பாகவுண்டர் வீதி, பூ மார்க்கெட், சிந்தாமணி பகுதிகளில் உள்ள கண் ணாடி கடைகளில் 120-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், 35 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம் சுமக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்த நிலையில், கண்ணாடி நிறுவனங்கள் தங்கள் கிடங்குகளை நகருக்கு வெளியில் அமைத்து, அதில் வடநாட்டு தொழிலாளர்களை பணியில் அமர்த்துகின்றனர். இதனால் உள்ளூர் தொழிலாளர்களின் ஜீவாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த 3 மாதங்களாக மிகவும் பாதிக்கப்பட்டுள் ளோம். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்` என்று வலியுறுத்தியுள்ளனர்.

கோவை பாப்பநாயக்கன்புதூர் பகுதி மக்கள் அளித்த மனு: பாப்பநாயக்கன்புதூர் பகுதியில் உள்ள மருதமலை பிரதான சாலையைக் கடக்க மிகுந்த சிரமமாக உள்ளதால், இப்பகுதியில் வேகத்தடை, போக்குவரத்து சிக்னல் அல்லது சுரங்கப்பாதை, மேல்நடைபாதை அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவர் ஜி.இருதயராஜா, செயலர் ஆர்.எஸ்.கணேசன், மாநகரச் செயலர் டி.சௌந்தரராஜ் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு: தூத்துக்குடி மாவட்டம் ஏரலையைச் சேர்ந்த வியாபாரி ஜெய வேணு, ஒரு குற்ற வழக்குத் தொடர்பாக சாட்சியம் அளிக்க கோவைக்கு வந்தபோது, ஒரு கும்பல் மிரட்டியுள்ளது. இந்நிலையில் அவரது சடலம் கிணற் றில் கிடப்பதாக போலீஸார் தெரிவித் துள்ளனர். இதுவரை அவரது சடலம் மீட்கப்படவில்லை. விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

கோவை ஒண்டிப்புதூர் காமாட்சி புரம் மாரியம்மன் வழிபாட்டுக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில், ‘காமாட்சிபுரம் மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் செய்ய அனுமதிக்க வேண்டும்` என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x